Don't Miss!
- Technology
பட்ஜெட் விலையில் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
- News
பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டலாம்.. அமெரிக்கா எச்சரிக்கை.. துருக்கி நிலநடுக்கம்.. ஷாக் புகைப்படங்கள்
- Finance
சாமானிய மக்களின் முதலீடு என்னவாகும்.. அதானி குழுமத்தில் எஸ்பிஐ, எல்ஐசி-ன் நிலை என்ன?
- Lifestyle
கக்கா போக முடியாம ரொம்ப கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகள சாப்பிடுங்க... உடனே சரியாகிடுமாம்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Automobiles
சின்ன பசங்க வாகனம் ஓட்டினால்... பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை!! தமிழ்நாட்டுக்கும் இப்படியொரு சட்டம் தாங்க தேவை
- Sports
"இனியும் பொறுத்துக்க முடியாது" ரோகித்-க்கு பிசிசிஐ எச்சரிக்கை.. இன்னும் 5 டெஸ்களில் பெட்டிய கட்டுங்க
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ராதிகாவிடம் வாக்குவாதம்.. பாக்கியாவிடம் எகிறும் கோபி.. என்னதான் நினைச்சிட்டுருக்கீங்க கோபி?
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாக்கியலட்சுமி உள்ளது. இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
தொடரில் தன்னுடைய குடும்பத்தினருக்கும் காதலிக்கும் இடையில் கேம் ஆடும் கோபி கேரக்டர் ரசிகர்களின் அதிகமான வெறுப்பை சம்பாதித்துள்ளது.
இது அந்தக் கேரக்டருக்கு கிடைத்துள்ள வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அந்த நடிகர் கதையை கதையாக பாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
நான்
மிஸ்
பண்ண
படத்தில்
விஜய்
சேதுபதி
நடித்தார்...
நடிகர்
பரணி
பகிர்ந்த
தகவல்!

விஜய் டிவி
விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் ரசிகர்களின் அதிமான வரவேற்பை பெற்று தொடர்ந்து டிஆர்பியிலும் முன்னணியை பிடிக்கும். ஆனால் சமீப காலங்களில் இந்த சேனலின் தொடர்ந்து கொஞ்சம் சறுக்கலைதான் சந்தித்து வருகின்றன. அடுத்தடுத்த சிறப்பான தொடர்களை ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி.

4வது இடத்தில் விஜய் டிவி தொடர்கள்
ஆயினும்
சன்
டிவியின்
சுந்தரி,
கயல்,
வானத்தை
போல
உள்ளிட்ட
தொடர்களை
வெற்றிக்
கொள்ள
முடியாமல்
தவித்து
வருகிறது
விஜய்
டிவி.
டிஆர்பியில்
4வது
மற்றும்
5வது
இடங்களையே
விஜய்
டிவி
தொடர்கள்
பிடித்து
வருகின்றன.
ஆயினும்
இந்த
சேனலின்
நிகழ்ச்சிகள்
நம்பர்
ஒன்
இடத்தில்தான்
நீடித்து
வருகின்றன.

மகா சங்கமம்
கடந்த சில வாரங்களில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் மகா சங்கமம் நடத்தின. ஆயினும் டிஆர்பியில் 4வது இடத்தையே இந்தத் தொடர்கள் பிடித்துள்ளன. குறிப்பாக பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இந்த தொடரில் பல ட்விஸ்ட்கள் காணப்படுகின்றன.

ராதிகா வாக்குவாதம்
கோபியின் அப்பாவின் 75வது பிறந்தநாளையொட்டி அங்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூர்த்தி, தனம் உள்ளிட்டவர்கள் கோபியின் திருவிளையாடலை கண்டு பிடித்து, அதை சொல்ல முடியாமல் அவமானப்பட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்நிலையில் கோபியின் நடவடிக்கை சந்தேகம் கொள்ளும் ராதிகா, அவரது வீட்டிற்கு தன்னை அழைத்து செல்லக் கட்டாயப்படுத்துகிறார்.

பாக்கியாவிடம் கோபம்
அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிய, அங்குவரும் தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமியிடம் அந்த கோபத்தை காட்டுகிறார் கோபி. இவ்வாறு தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ப்ரமோவின் காட்சிகள் காணப்படுகின்றன. ராதிவிடம் உள்ள கோபத்தை பாக்கியாவிடம் அவர் காட்டுவது ரசிகர்களை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

கோபி எப்போது மாட்டுவார்?
இந்நிலையில் தொடர்ந்து தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினரையும், ராதிகாவையும் ஏமாற்றிவரும் கோபி, எப்போதுதான் மாட்டுவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு தொடரின் இயக்குநர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர் மாட்டிவிட்டால் அங்கு தொடரை முடிக்கத்தான் வாய்ப்புள்ளது.