Don't Miss!
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
ஹேமாவோட அம்மா நான்தான்.. உண்மையை போட்டுடைத்த கண்ணம்மா.. அதிர்ச்சியான பாரதி!
சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடராக இருந்துவந்த பாரதி கண்ணம்மா தொடர்ந்து தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் 8வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து பிரிந்து வாழும் பாரதி மற்றும் கண்ணம்மா, அவர்களது குழந்தைகளை வைத்தே கதையை கொடுத்து வருகிறது இந்த தொடர்.
இதனால் இந்தத் தொடர் எப்போது முடியும் என்று ரசிகர்களே எதிர்பார்க்கத் துவங்கி விட்டனர்.
முன்னாள் மனைவிகள் குறித்து பேசிய பாலிவுட் ஹீரோ: அவரால மட்டும் தான் இப்படியெல்லாம் பேச முடியும்!

விஜய் டிவி தொடர்கள்
விஜய் டிவியில் எப்போதுமே நிகழ்ச்சிகளுக்கு இணையாக தொடர்களும் கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியின் முக்கியமான தொடராக முதன்மை தொடராக தற்போது மாறியுள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் கடந்த வாரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது.

முதலிடத்தில் பாக்கியலட்சுமி தொடர்
இந்த வாரத்தில் சன் டிவியின் கயல் தொடர் முதலிடத்தை பிடித்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி ஒரு இடம் கீழே இறங்கி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு காலகட்டத்தில் முதலிடத்தில் இருந்த பாரதி கண்ணம்மா தற்போது டிஆர்பியில் 8வது இடத்தை பிடித்துள்ளது.

ரசிகர்கள் சலிப்பு
ஒரே மாதிரியான காட்சி அமைப்புகள் இந்தத் தொடர்குறித்து ரசிகர்கள் சலிப்படைய செய்துள்ளன. இதனிடையே இடையில் பாரதியின் மருத்துவமனையில் கண்ணம்மா வேலைக்கு சேர்வதாகவும் அதன்மூலம் இருவருக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகளையும் காட்சிப் படுத்தியிருந்தார் இயக்குநர்.

மகா சங்கமம்
ஆனால் அந்த எபிசோட்கள் ரசிகர்களை அதிகமாக கவரவில்லை இந்நிலையில் தற்போது ராஜா ராணி தொடருடன் இணைந்து மகா சங்கமத்தில் பாரதி கண்ணம்மா தெடர். சுற்றுலா போன இடத்தில் அவர்கள் குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளில் பாரதியும் கண்ணம்மாவும் துணையாக இருக்கின்றனர்.

ஹேமா -லக்ஷமி பிறந்தநாள்
இந்நிலையில் தற்போதைய எபிசோடில் ஹேமா மற்றும் லக்ஷ்மியின் பிறந்தநாள் கொண்டாட்டம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை காட்ட வேண்டும் என்று ஹேமா கேட்க, அதற்கு பாரதியும் ஒப்புதல் தெரிவிக்கிறார்.

கொதித்தெழும் கண்ணம்மா
கோபத்தில் பொங்கியெழுகிறார். கோபத்துடன் தான்தான் ஹேமாவின் அம்மா என்பதை கண்ணம்மா கோபத்துடனும் ஆத்திரத்துடனும் வெளிப்படுத்துகிறார். தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாகவும் அதில் ஒன்றை சவுந்தர்யா எடுத்து சென்று பாரதி வளர்க்க கொடுத்ததாகவும் கண்ணம்மா கூறுகிறார். ஒரு தாய்க்கு அநியாயம் நடப்பதாகவும் கண்ணம்மா தெரிவிக்கிறார்.

அதிர்ச்சிக்குள்ளாகும் பாரதி
இதையடுத்து பாரதி மிகுந்த அதிர்ச்சி அடைகிறார். அவர் என்ன கூறுகிறார் என்று தன்னுடைய அம்மாவிடம் கேட்கிறார். கண்ணம்மா கூறுவது உண்மைதான் என்பதை சவுந்தர்யாவும் தெளிவுப்படுத்துகிறார். ஹேமாவை ஆதரவற்ற இல்லத்திலிருந்து எடுத்து வந்ததாக நினைத்த நிலையில், இந்த விஷயம் பாரதிக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது.