Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
என் பொண்டாட்டி ஒரு தெய்வம்.. கதறலுடன் மன்னிப்பு கேட்ட பாரதி!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாரதி கண்ணம்மா தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தத் தொடரில் நீண்ட நெடுங்காலத்திற்கு பிறகு பாரதிக்கு தன்னுடைய மனைவி மற்றும் மகள்கள் குறித்த உண்மை தெரிய வருகிறது.
இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் பாரதி, தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு கதறி அழுகிறார்.
தமிழ்
பட
நடிகரிடம்
வாய்ப்பு
கேட்ட
ஜான்வி
கபூர்..
வெட்கப்பட்ட
நடிகர்!

விஜய் டிவியின் தொடர்கள்
விஜய் டிவி எப்போதுமே நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை தொடர்களுக்கும் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த சேனலின் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே சீசன் 2 ஆகிய தொடர்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகின்றன.

பாரதி கண்ணம்மா தொடர்
நீண்ட நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. இதன் ஒவ்வொரு காட்சி அமைப்பும் தற்போது நிறைவை நோக்கியே நகர்ந்து வருகிறது. தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் தனக்குப் பிறந்த ஹேமா மற்றும் லட்சுமி ஆகிய இருவரையும் தன்னுடைய குழந்தைகள் இல்லை என்று பாரதி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.

வெண்பாவின் சதித்திட்டம்
தன்னுடைய தோழியான வெண்பாவின் சதி திட்டத்தால் அவர் தொடர்ந்து கண்ணம்மாவை வெறுத்து வந்தார். தன்னுடைய மகள்கள் ஹேமா மற்றும் லட்சுமியை அவர் தனக்கு பிறக்கவில்லை என்று தொடர்ந்து கூறி வந்தார். கண்ணம்மா, பாரதி மற்றும் வெண்பா இவர்களுக்கு இடையிலான கதைகளத்தை ஒட்டியே இந்த சீரியல் தொடர்ந்து பல மாதங்களாக ஒளிபரப்பாகி வந்தது.

ரசிகர்கள் கேள்வி
இதனால் இந்த சீரியலை எப்போ முடிப்பீங்க என்று ரசிகர்களே கேள்வி கேட்கும் வகையில் சீரியல் ரசிகர்களை வெறுப்புக்கு உள்ளாகி வந்தது. இதை மாற்றும் வகையில் சீரியலின் இடையில் பரப்பரப்பை நுழைக்கும் வகையில் தீவிரவாதிகள் பாரதியின் ஹாஸ்பிடலில் முற்றுகை உள்ளிட்ட பல நிகழ்வுகளை இடையில் புகுத்தினால் இயக்குனர்.

ரசிகர்கள் கமெண்ட்
அப்படியாவது சீரியல் களை கட்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீரியலை முடிக்கத்தான் வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கங்கணம் கட்டிக்கொண்டு சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வந்தனர். வேறு வழி இல்லாமல் சீரியலை முடிக்க இயக்குனர் செயல்பட்டு வருகிறார்

பாரதியின் ஞானோதயம்
தன்னுடைய மகள்கள் பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பாரதிக்கு திடீர் ஞானோதயம் ஏற்பட்டு தற்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அதன் மூலம் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் தன்னுடைய மகள்கள் தான் என்பதை அவர் தெரிந்து கொள்கிறார். இதையடுத்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் பாரதி கண்ணம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

பொண்டாட்டி ஒரு தெய்வம்
தன் பொண்டாட்டி ஒரு தெய்வம் என்று அவர் கதறலுடன் கூறுகிறார். தன்னை ஏற்றுக் கொள்ளும்படியும் கண்ணம்மாவிடம் அழுதபடி கேட்கிறார். இதை அடுத்து கண்ணம்மா என்ன மாதிரியான முடிவை எடுப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் காணப்படுகிறது.