Don't Miss!
- News
"கலங்கிய குட்டை".. மீன் யாருக்கு.. 25 எம்எல்ஏக்கள் வேற.. இடைத்தேர்தலில் சசிகலா?.. பிளான் இதுதானாமே
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி உங்களின் உண்மையான நண்பனைஎப்படி அடையாளம் தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?
- Finance
100 பில்லியன் டாலர் இழப்பு.. அதானி குழும பங்குகள் தொடர் சரிவு..!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெண்பாவால் கடத்தப்பட்ட ஹேமா.. போராடி மீட்ட கண்ணம்மா மற்றும் குடும்பத்தினர்!
சென்னை : விஜய் டிவியின் மாஸ் சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளது.
இந்தத் தொடரில் திருமணம் ஆன நிலையிலும் பாரதி மற்றும் கண்ணம்மாவை பழிவாங்கும் நோக்கத்தில் அவர்களது மகள் ஹேமாவை கடத்தியுள்ளார் வெண்பா.
இதையடுத்து காணாமல் போன தனது மகளை கண்ணம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் தேடுவதாக காட்சிகள் அமைந்தது.
வெளியான
டிஎன்ஏ
டெஸ்ட்..
வெளிச்சத்திற்கு
வந்த
உண்மை..
கதறி
அழுத
பாரதி!

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாரதி கண்ணம்மா தொடர் அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு தந்து வருகிறது. இந்தத் தொடரில் வெண்பாவிற்கு ரோகித்துடன் திருமணம் நடந்த பின்பாவது அவர் திருந்துவார், சீரியலை முடிப்பார்கள் என்றே ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் திருமணம் ஆன நிலையிலும் அவர் தன்னுடைய வில்லத்தனத்தை தொடர்ந்து வருகிறார்.

ஹேமாவை கடத்தும் வெண்பா
பாரதி மற்றும் கண்ணம்மாவை பழிவாங்கும் நோக்கத்திலும் தன்னை கல்லால் அடிக்கும் ஹேமாவை பழிவாங்கும் நோக்கத்திலும் அடியாட்களை வைத்து ஹேமாவை கடத்துகிறார் வெண்பா. தொடர்ந்து ஹேமாவை தீர்த்துக் கட்டவும் உத்தரவிடுகிறார். ஆனால் அவரை, கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்க அடியாட்கள் முடிவு செய்து லாரியில் கடத்துகின்றனர். இதனிடையே தன்னுடைய மகளை காணாமல் தவிப்புடன் தேடுகிறார் கண்ணம்மா.

பரிதவிப்பில் கண்ணம்மா மற்றும் குடும்பத்தினர்
பல இடங்களிலும் ஹேமாவை தேடி பரிதவிப்புடன் கண்ணம்மா மற்றும் அவரது மாமியார், கொழுந்தனார் மற்றும் அவரது மனைவி என தேடுகின்றனர். இந்த நேரத்தில் கண்ணம்மாவின் தவிப்பு ரசிகர்களையும் ஒற்றிக் கொள்கிறது. இதனிடையே போக்குவரத்தில் சிக்கும் லாரியில் இருக்கும் ஹேமாவை, கண்ணம்மா உள்ளிட்டவர்கள் கண்டு பிடிப்பதாக தற்போது வெளியாகியுள்ள ப்ரமோ காணப்படுகிறது.

பாரதிக்கு தெரியவரும் உண்மை
இதனிடையே, டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்டை பெறும் பாரதிக்கு, ஹேமா மற்றும் லஷ்மி இருவரும் தன்னுடைய மகள்கள்தான் என்ற உண்மை தெரியவருகிறது. இதையடுத்து தான் இத்தனை ஆண்டுகளாக கண்ணம்மாவை வதைத்தது குறித்து நினைத்து செய்வது அறியாமல் தவிக்கிறார். கண்ணீர் விட்டு கதறுகிறார். இதையடுத்து அவர் என்ன மாதிரியான முடிவை எடுப்பார் என்பது குறித்தும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

முடிவிற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்
நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா துவக்கத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிஆர்பியிலும் முன்னணியில் இருந்தது. தொடர்ந்து சீரியலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்தத் தொடர் சறுக்கிய நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே, சீரியலை எப்படி முடிப்பார்கள் என்பது குறித்து அறிய ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.