Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தொலைந்து போன உயர்ரக பைக்.. புது பைக் வாங்கி கணவருக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்த கோமாளி!
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் மணிமேகலை.
இவர் தனது காதல் கணவருடன் சென்னையில் வசித்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர்களது பைக் திருடு போனதாக சமூகவலைதளத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார்.
தாங்கள் முதல்முறையாக பணத்தை சேர்த்து வைத்து வாங்கிய பைக் என்றும் அவர் கூறியிருந்தார்.
அட்லியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.. யாரு சொல்லியிருக்காங்க பாருங்க!

கோமாளி மணிமேகலை
விஜேவாக இருந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் மணிமேகலை. சன் டிவி, சன் மியூசிக், விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் இவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.

அடுத்தடுத்த சீசன்கள்
குக் வித் கோமாளி சீசன் 2 இவருக்கு சிறப்பாக அமைந்தது. இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் இவர் கோமாளியாக இருந்து வருகிறார். இவரது லொட லொட பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விஜே என்றாலே தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம்.

வித்தியாசமான கெட்டப்புகள்
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றி ரசிகர்களை மட்டுமின்றி நிகழ்ச்சியின் குக்குகள் மற்றும் நடுவர்களையும் இவர் கவர்ந்து வருகிறார். இவரது சேட்டைகள் இந்த நிகழ்ச்சியில் மிகவும் பிரபலம். அடுப்பை கூட பற்ற வைக்கத் தெரியாது என்று இவர் கூறுவதை ஏற்க முடியவில்லை என்றாலும் இவரது சேட்டைகள் பலே ரகம்தான்.

திருடு போன உயர்ரக பைக்
இவர் தன்னுடைய குடும்பத்தினரை எதிர்த்து ஹுசைன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது விலையுயர்ந்த பைக் திருடப் போனதாக இன்ஸ்ட்ராகிராமில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார். திருமணத்திற்கு பிறகு கஷ்டப்பட்டு சேமித்து வாங்கிய பைக் என்றும் தெரிவித்திருந்தார்.

பிறந்தநாள் பரிசு
வருஷத்திற்கு ஒரு சம்பவம் எங்கிருந்துதான் வருகிறதோ என்றும் விரைவில் பைக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஹுசைனின் பிறந்தநாளையொட்டி மீண்டும் உயர்ரக பைக் வாங்கியுள்ளது இந்த ஜோடி. புதிய பைக்குடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவையும் பகிர்ந்துள்ளனர்.

பிறந்தநாள் கிப்ட் டாஸ்க்
இதனிடையே புதிய பைக் வாங்கியதை குறிப்பிட்டு தன்னுடைய பிறந்தநாள் கிப்ட் டாஸ்க் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பைக்கை எங்கே பார்க் பண்றீங்கன்னு மட்டும் சொல்லுங்க என்று ரசிகர் ஒருவர் நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளார்.