Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஒரு மாப்பிள்ளையை எடுத்தா இன்னொரு மாப்பிள்ளை ஃப்ரீ ... களைகட்டும் ஈரமான ரோஜாவே புதிய பிரமோ
சென்னை : விஜய் டிவியில் புதிய தொடரான ஈரமான ரோஜாவே சீசன் 2 சிறப்பான வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரையில் தினந்தோறும் இரவு 10 மணிக்கு இந்தத் தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது.
விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் இந்த தொடரின் புதிய பிரமோ வெளியாகியுள்ளது.
சர்வானந்த்
ஹீரோவாக
நடிக்கும்
கணம்
ஃபர்ஸ்ட்
சிங்கிள்
அப்டேட்
வெளியானது!

விஜய் டிவி நிகழ்ச்சிகள்
விஜய் டிவி சிறப்பான பல நிகழ்ச்சிகளை போலவே சிறப்பான தொடர்களையும் ஒளிபரப்பி வருகிறது. குக் வித் கோமாளி, பிக் பாஸ் சூப்பர் சிங்கர் என அடுத்தடுத்த பல நிகழ்ச்சிகளை விஜய் டிவி வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளின் போட்டியாளர்கள் சிறப்பான வகையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

சிறப்பான தொடர்கள்
விஜய் டிவி தனது நிகழ்ச்சிகளை போலவே தொடர்களிலும் சிறப்பான கவனத்தை செலுத்தி வருகிறது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடர்
இந்நிலையில் தற்போது தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரின் இரண்டாவது சீசனும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முன்னதாக ஈரமான ரோஜாவே தொடர் பிற்பகலில் ஒளிபரப்பான நிலையில் 807 எபிசோட்களுடன் கடந்த ஆகஸ்டுடன் இந்த தொடர் நிறைவு பெற்றது.

ஈரமான ரோஜாவே தொடர்
கடந்த 2018 ஜூலை 9ம் தேதி இந்த தொடர் துவங்கப்பட்டது. இதில் மலர் என்ற கேரக்டரில் நடிகை பவித்ரா தனது சிறப்பான நடிப்பை அளித்திருந்தார். இதேபோல வெற்றி என்ற கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் திரவியம்.

புதிய பிரமோ வெளியீடு
தற்போது இந்த தொடரின் சீசன் 2 இரவில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் முந்தைய பிரமோக்கள் சிறப்பான வகையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. சீரியலுக்கும் சிறப்பான வரவேற்பை கொடுத்தன. இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள பிரமோவும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

மாப்பிள்ளை ஃப்ரீ
இதில் ஒரு மாப்பிள்ளையை எடுத்தால் இன்னொரு சூப்பர் மாப்பிள்ளை ஃப்ரீ என்று மணப்பெண்ணின் தங்கையிடம் ஹீரோ கூறுவதாக அமைந்துள்ளது. இதையடுத்து அவரும் மாற்றி மாற்றி பேச, அவர் இவரை துரத்த என்று போகிறது பிரமோ. மிகவும் யூத்புல்லாக இந்த பிரமோ காணப்படுகிறது.