Don't Miss!
- Finance
ஈக்விட்டி F&O முதலீட்டாளர்கள் ஷாக்.. 89% பேருக்கு நஷ்டம்..!
- News
திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தபோதும், ஆளுநர் தேநீர் விருந்தில் ஸ்டாலின் பங்கேற்பது ஏன் தெரியுமா?
- Sports
ஐபிஎல் தொடருக்கு வந்த ஆபத்து.. கடும் அதிருப்தியில் அணி நிர்வாகிகள்.. எப்படி சமாளிக்கும் பிசிசிஐ
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இந்திக்கு போகும் சூப்பர்ஹிட் தமிழ் சீரியல்... எதுன்னு பாருங்க
சென்னை : விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சீரியல்களும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக உள்ளன.
இந்த தொடர்கள் வழக்கத்திற்கு மாறாக அழுகையை மையமாக கொள்ளாமல் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றன.
பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
கமல்
போனதுக்கு
காரணமே
வேற...
பிக்பாஸ்
அல்டிமேட்
குறித்து
பகீர்
கிளப்பை
வனிதா!

விஜய் டிவி நிகழ்ச்சிகள்
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவைகளாக ஒளிபரப்பாகி வருகின்றன. குறிப்பாக பிக்பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் அதன் டாஸ்குகள், ஏன் நடுவர்கள்கூட ரசிகர்களை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

சிறப்பான தொடர்கள்
நிகழ்ச்சிகளை மட்டுமின்றி தொடர்களையும் விஜய் டிவி தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. மற்ற சீரியல்களை போல இல்லாமல் பார்க்கும் ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும்வகையில் இந்த தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த தொடர்கள் அனைத்தும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இடம்பெற்று வருகின்றன.

அடுத்தடுத்த சீசன்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களுக்கு ரசிகர்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொருத்து அடுத்தடுத்த சீசன்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக கடந்த 2018ல் இருந்து ஒளிபரப்பான தொடர் ஈரமான ரோஜாவே. தொடரில் மலர் என்ற கேரக்டரில் பவித்ரா நடித்திருந்தார்.

ஈரமான ரோஜாவே தொடர்
மேலும் தொடரின் நாயகன் வெற்றியாக புதுமுக நடிகர் திரவியம் நடித்திருந்தார். இவர்களுடன் சியாம், சாய் காயத்ரி, பிரேமலதா, பிரவீன் உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர். மிகவும் முக்கியமான தொடராக இந்த தொடர் இருந்தது. 807 எபிசோட்களுடன் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி இந்த தொடர் நிறைவு பெற்றது.

ஈரமான ரோஜாவே சீசன் 2
இதையடுத்து தற்போது இந்த தொடரின் இரண்டாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் திருமணத்தின்போது மணமகள் கடத்தப்பட, அண்ணன் -தம்பி மற்றும் தங்கை -அக்கா என ஜோடி மாறுகிறது. இதையடுத்து என்ன நிகழ்கிறது என்பதாக இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக செல்கிறது.

இந்தியில் ரீமேக்
இந்த தொடர் மனசிச்சி சூடு என்ற பெயரில் தெலுங்கிலும், ஜீவா ஹூவாகிதே என்ற பெயரில் கன்னடத்திலும் ஒளிபரப்பான நிலையில் அடுத்ததாக விரைவில் இந்திக்கும் செல்கிறது. இந்த தொடரின் சீசன் 1 தற்போது இந்தியில் வோ தோ ஹை அல்பேலா என்ற பெயரில் இந்தியில் ரீமேக்காக உள்ளது.

மார்ச் 14 முதல் ஒளிபரப்பு
இந்த ரீமேக்கில் மகாபாரம் புகழ் ஷாஹீர் நாயகனாக நடிக்க உள்ளார். மார்ச் 14ம் தேதி இரவு 9 மணிக்கு ஸ்டார் பரத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. எப்போதுமே இந்தியில் இருந்து தமிழுக்கு சீரியல்கள் ஒளிபரப்பாகும். இந்நிலையில் தமிழிலிருந்து இந்திக்கு ஒரு சீரியல் ரீமேக்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.