»   »  இளையராஜா 1000... சொதப்பிய விஜய் டிவி... செம கடுப்பில் ரசிகர்கள்!

இளையராஜா 1000... சொதப்பிய விஜய் டிவி... செம கடுப்பில் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா ரசிகன் என்பதை தாண்டி ஒவ்வொரு தமிழனும் தலையில் தூக்கி கொண்டாடும் கலைஞன் இளையராஜா. இதுவரை 1000 படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இதை கௌரவிக்கும் பொருட்டு விஜய் டிவி இவருக்கு விழா ஒன்று எடுத்தது.

சும்மா அல்ல... டிக்கெட் விற்பனை, நிகழ்ச்சி ஒளிபரப்பு என அனைத்திலும் கல்லா கட்டுவதற்காகவே இளையராஜாவிற்கு பாராட்டு விழா என்ற பெயரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது விஜய் டிவி. ஆனால் வந்த அத்தனை பேரையும் கடுப்பாக்கி அனுப்பிவைத்து வசவுகளை வாரிக் கட்டிக் கொண்டது.

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவிற்கு பாராட்டு விழா என்ற உடனே பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். கண்ணுக்கும் காதுக்கும் குளிர்ச்சியான விருந்து கிடைக்கும் என்று இதற்காக டிக்கெட் வாங்குவதிலும் முண்டியடித்து வாங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியை இளையராஜா மியூசிக் அண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமும், விஜய் டிவியும் இணைந்து நடத்தியதால் பணத்தை பற்றி கவலைப்படாமல் இந்த நிகழ்ச்சியை பார்த்தே ஆகவேண்டும் என்று சென்ற அனைவருக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஆரம்பமே சொதப்பல்

ஆரம்பமே சொதப்பல்

விஜய் டிவி நிகழ்ச்சிக்கு செல்லும் போது இரவு உணவு மற்றும் காலை உணவு எடுத்து சென்றால் நல்லது ஏன் என்றால் எப்ப ஆரம்பிப்பாங்க எப்ப முடியும் என்று அந்த ஆண்டவனுக்கே தெரியாது என்று ஒரு முறை சிவகார்த்திகேயனே சொல்லிருக்கிறார் அதே போல தான் ஆறு மணி என்று சொல்லி 7 மணிக்கு தான் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

இளையராஜாவிற்கு மரியாதை

இளையராஜாவிற்கு மரியாதை

நிகழ்ச்சிக்கு நட்சத்திர பட்டாளம் குறைவுதானாம் நடிகர்சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இளையராஜாவுக்கு மரியாதையை செய்தனர். நாயகிகள் ராதா, பூர்ணிமா பாக்யராஜ், மீனா, பானுப்ரியா, கெளதமி ஆகியோர் மேடையேறி இளையராஜாவின் பாடல்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

மேடைக்கு வந்த கமல்

மேடைக்கு வந்த கமல்

ராதா, பூர்ணிமா பாக்யராஜ், மீனா, பானுப்ரியா, கெளதமி அனைவரும் மேடையில் இருக்கும் போதே கமலை அரங்கினுள் அழைத்தார்கள். அப்போது "கமலை அனைத்து நாயகிகளும் அழைத்துச் சென்று இளையராஜாவுக்கு அருகில் அமர வைப்பார்கள்" என்று தெரிவித்தார் தொகுப்பாளர் டிடி.

இளையராஜா பற்றி குஷ்பு

இளையராஜா பற்றி குஷ்பு

ஜெயராம், குஷ்பு, வெங்கடேஷ் ஆகியோர் மேடையில் தங்களுடைய வாழ்க்கையில் இளையராஜா இசையின் பங்கு குறித்து பேசினார்கள்."காரில் நீண்ட தூர பயணம் செல்லும் போது பெட்ரோல் இருக்கிறதா என்று பார்ப்பது போல இளையராஜாவின் சிடி இருக்கிறதா என்று பார்ப்போம். அது தான் இளையராஜா" என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் குஷ்பு.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடத்திலே ஒலி மற்றும் ஒளி (ஆடியோ மற்றும் வீடியோ ) இரண்டும் சொதப்பல் ஆகிவிட்டது வந்த ரசிகர்கள் கோபத்தில் கத்த ஆரம்பித்தனர். ஆனாலும் அதை பற்றி கவலைபடாமல் நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவி ஒரு கட்டத்துக்கு மேல் ரசிகர்கள் நாற்காலி எடுத்து உயரபிடித்து சத்தம் போட ஆரம்பித்துள்ளனர்.

தவித்த இளையராஜா

தவித்த இளையராஜா

அதற்கும் செவி சாய்க்காத விஜய் டிவி பின்னர் விஜய் டிவி டவுன் டவுன் என்று கத்த ஆரம்பித்த உடன் அதை சரி செய்துள்ளனர்.

பிரதாப் போத்தன் குமுறல்

பிரதாப் போத்தன் குமுறல்

இந்த நிகழ்ச்சி பற்றி அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் தனது முகநூல் பக்கத்தில் விஜய் டிவியின் ‘இளையராஜா1000' நிகழ்ச்சி குறித்து மிகவும் வருத்தத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கலைஞரின் மரியாதைக்குரிய நிகழ்ச்சி பலரின் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளது. முக்கியமாக நட்சத்திரங்கள், ரசிகர்களின் நன்மதிப்பைப் பெறத் தவறியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

பார்த்திபன் - டிடி

பார்த்திபன் - டிடி

எல்லோரும் இளையராஜா பாடல்களை கேட்கலாம் என்றுதான் வந்திருந்தனர். ஆனால் பாட்டுக்குப் பதில் பேச்சுக் கச்சேரியாக மாறிப் போனதால், ரசிகர்கள் சோர்வாகி விட்டார்களாம். இதற்கு முக்கியக் காரணம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பார்த்திபன், டிடி தான். இருவரும் பேசி, பேசி நிகழ்ச்சியின் நேரத்தை இழுத்துவிட்டார்கள்.

English summary
Vijay TV's Ilayaraja 1000 irritates Fans and film personalities.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil