Don't Miss!
- News
மேளங்கள் முழங்க.. பல்லக்கில் வெற்றிகரமாக பவனி வந்த தருமபுரம் ஆதீனம்.. எந்த எதிர்ப்பும் இல்லை!
- Automobiles
இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்.. நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்னது 150 தங்கச்சியா?...பின்ன இப்படி இருந்தா எப்படி ‘லவ்’வ சொல்வாங்க?...நீயா நானா சுவாரஸ்யம்
சென்னை : விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சி 10 ஆண்டுகளையும் கடந்து வெற்றிகரமான ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரமும் புத்தம் புதிய தலைப்புடன் ரசிகர்களை சந்திக்க வருகிறார் கோபிநாத்.
பாஸான
'டான்'...
முதல்
நாள்
வசூல்…
எவ்வளவு
தெரியுமா?

நீயா நானா நிகழ்ச்சி
விஜய் டிவியில் எப்போதுமே நிகழ்ச்சிகளை ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகிறது. அந்த வகையில் 10 ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது நீயா நானா நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஒரே தொகுப்பாளராக கோபிநாத் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

விவாத நிகழ்ச்சிகளின் முன்னோடி
வாரந்தோறும் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு, அதில் உள்ள சாதக பாதகங்களை இந்த நிகழ்ச்சி அலசுகிறது. விசுவின் அரட்டை அரங்கம், அகட விகடம் மற்றும் லியோனி, சாலமன் பாப்பையா ஆகியோரின் பட்டிமன்றங்கள்தான் விவாத நிகழ்ச்சிகளாக அறியப்பட்ட தமிழ் ரசிகர்களிடையே "புது ஃப்ளேவரை" அள்ளித் தெளித்தது நீயா நானா. எனவேதான், தற்போதுள்ள விவாத நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் முன்னோடியாக நீயா நானா நிகழ்ச்சி உள்ளது. நிகழ்ச்சியின் சிறப்பான தொகுப்பாளரான கோபிநாத், இந்த நிகழ்ச்சிக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

புதிய ப்ரமோ வெளியீடு
இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த வாரம் நிகழ்ச்சியில் உயரமானவர்களுடன் நீயா நானா நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் பேசும் ஒருவர் காலை நீட்டி உட்கார முடியாது என்ற காரணத்தால் பயணங்களை கூடியவரையில் தவிர்த்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

உயரமானவர்கள் வலி
தொடர்ந்து அடுத்தடுத்த நபர்கள் பேசிய நிலையில், அதில் பேசும் மற்றொருவர், தன்னுடைய உயரம் காரணமாக தன்னை இதுவரை 72 பெண்கள் நிராகரித்துள்ளதாக வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மற்றொருவர் தனக்கு 150 தங்கச்சிகள் உள்ளதாகவும் ஆனால் காதல்தான் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

150 தங்கச்சிகள்
நிகழ்ச்சியில் பேசிய பெண் ஒருவர், தன்னிடம் உயரமானவர்கள் காதல் தெரிவித்திருந்தால் தான் கண்டிப்பாக அதை ஏற்றிருப்பேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து 150 தங்கச்சிகள் என்று கூறியவரிடம் கோபிநாத் அவருக்கு காதல் சொல்ல வருமா என்று கேள்வி எழுப்ப, வராது என்று அவர் கூறுகிறார்.

களைகட்டும் ப்ரமோ
இதையடுத்து அந்தப் பெண் பின்பு எப்படி 150 தங்கச்சிகள் இல்லாமல் இருப்பார்கள் என்று கலாய்த்துத் தள்ளுகிறார். இவ்வாறு இந்த ப்ரமோவே களைகட்டும் வகையில் அமைந்துள்ளது. நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.