Don't Miss!
- News
திருக்குறளை கூட சலுகை என நினைத்து விட்டாரோ.. 'எந்த விதத்திலும் உதவாத பட்ஜெட்'.. தொல். திருமாவளவன்
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பின்னாடியே வந்துடுவேன்னு நினைச்சீங்களா.. அப்பாவிற்கு பதிலடி கொடுத்த மீனா!
சென்னை : விஜய் டிவியின் முக்கிய தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் காணப்படுகிறது. அண்ணன் -தம்பிகளின் பாசம் மற்றும் குடும்ப ஒற்றுமையை இந்தத் தொடர் கதைக்களமாக கொண்டுள்ளது.
அண்ணன் -தம்பிகள் மட்டுமில்லாமல் அந்தக் குடும்பத்தில் வாழ வந்த பெண்களும் அந்தக் குடும்பத்தின் ஒற்றுமைக்காக மெனக்கெடுவது சிறப்பாக காட்டப்படுகிறது.
தன்னுடைய மகளை இந்த குடும்பத்தில் இருந்து பிரித்து சென்றுவிட துடிக்கும் ஜனார்த்தனத்தின் முயற்சி ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியையே பெறுகிறது.
மீண்டும்
சீரியல்
இயக்கத்
தயாரான
மெட்டி
ஒலி
டைரக்டர்..
ஆனா
எந்த
சேனலுக்கு?

சிறப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டியியின் முதல் 5 தொடர்களில் ஒன்றாக சிறப்பு காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி. இந்தத் தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும் அந்த கேரக்டராகவும் மாறி நடித்து வருவது இந்த சீரியலின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கதையில் மூத்த அண்ணனாக நடிக்கும் ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் நடிப்பு இந்தத் தொடருக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

அண்ணன் -தம்பி பாசம்
இந்தத் தொடரில் அண்ணன் -தம்பிகளின் பாசம் மையக்கருவாக வைக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தில் வாழ வந்துள்ள பெண்களின் ஒற்றுமையும் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தன்னுடைய அப்பா ஜனார்த்தனன், அனைவரையும் வீட்டை விட்டு செல்லுமாறு கூற, மீனாவும் அவர்களுடன் இணைந்து வெளியேறுகிறார். அவரது அப்பா தடுத்தும் அவர் கேட்கவில்லை.

தண்ணீர் தூக்க சிரமப்படும் மீனா
தற்போது புறா கூண்டு போன்ற ஒரு வீட்டை அனைவரும் ஹாலில் ஒன்றாக தூங்குவதாக காட்சி அமைப்புகள் காணப்படுகின்றன. மேலும் அந்த வீட்டில் தண்ணீர் வராது, பொதுக் குழாயில்தான் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்றதும் மீனாவும் ஐஸ்வர்யாவும் தண்ணீர் எடுக்க செல்கின்றனர். அங்கு தண்ணீர் குடத்தை தூக்க முடியாமல் மீனா தவிக்கிறார். இதற்கு முன்பு இதையெல்லாம் செய்திருந்தால்தானே என்று அங்கலாய்க்கிறார்.

அப்பாவிடம் மீனா கேள்வி
அப்போது அங்கே வரும் அவருடைய அப்பா ஜனார்த்தனன், தன்னுடைய மகள் இதுபோன்ற வேலைகளை செய்வதற்கா, வீட்டை விட்டு வெளியேறி ஜீவாவை திருமணம் செய்துக் கொண்டார் என்று கேள்வி எழுப்புகிறார். இவ்வளவு பார்ப்பவர், நள்ளிரவில் தங்களை வீட்டை விட்டு ஏன் வெளியேற்றினார் என்று மீனா கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து தான் மீனாவை அங்கேயே இருக்குமாறுதானே கூறினேன் என்று ஜனார்த்தனன் கூறுகிறார்.

அப்பாவின் தப்புக்கணக்கு
தன்னுடைய குடும்பத்தினரை வெளியில் அனுப்பிவிட்டு தான் மட்டும் சொகுசாக இருப்பேன் என்றும் வா என்று கூப்பிட்டவுடன் அப்பாவின் பின்னாலேயே வந்து விடுவேன் என்று தப்புக் கணக்கு போட்டீர்களா என்றும் அவர் தன்னுடைய அப்பாவிடம் கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து மகாராணி போல மீனாவை வளர்த்ததாகவும் தற்போது அவர் வாழ்ந்துவரும் வாழ்க்கையால் தங்களது நிம்மதி போய்விட்டதாகவும் ஜனார்த்தனன் கூறுவதாக தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் காணப்படுகிறது.