எப்படி எல்லாம் வாழணும்னு ஆசைப்பட்டேன்.. ஆனால், இன்ஸ்டாகிராமில் கதறி அழுத நடிகை!
சென்னை: சமூகவலைதளப் பக்கத்தில் பிரபல இன்ஃபுளூயன்சராக இருந்து சின்னத்திரை நடிகையாக மாறியவர் தான் நடிகை சாய் ரித்து. இவர் 143, காதல் வைத்து காத்திருந்தேன் போன்ற வெப் தொடர்களில் நடித்தன் மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் முத்தழகு, தங்கமகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 போன்ற அடுத்தடுத்த சீரியல்களில் முக்கிய கேரக்டரில் அறிமுகமான இவர். இன்ஸ்டாகிராமில் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், நீங்கள் தொடர்ந்து என்னுடைய இன்ஸ்டாகிராமை பார்த்து இருப்பீர்கள், உங்களுக்கு நன்றாகவே தெரிந்து இருக்கும், இப்பொழுது என்னுடைய உடல்நிலை சரியில்லை. இது எப்பொழுது சரியாகும் என்று எனக்கு தெரியவில்லை. யாருக்கு என்ன சொல்வதும் என்றும் எனக்கு தெரியவில்லை. எனக்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன். இதனால், இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவிட்டு இருக்கிறேன். ஆனால், சோசியல் மீடியாவில் இப்படி பேசுவது சரியா.. தப்பா.. என்று எனக்கு தெரியவில்லை. கடவுளிடம் அது வேண்டும், இது வேண்டும், வாழ்க்கையில் எல்லாம் வேண்டும் என கேட்கிறோம். இது எல்லாத்தையும் அனுபவிக்க நல்ல வாழ்க்கை வேண்டும், நல்ல உடல் நலம் வேண்டும், நீங்கள் நன்றாக இருந்தால் தான் அனைத்தையும் அனுபவிக்க முடியும் என்பதை இந்த ஐந்து நாட்களில் நான் நன்றாக கற்றுக் கொண்டேன்.

கதறி அழுத நடிகை: உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி, நான் விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன், இந்தப் போரில் நான் நிச்சயமாகப் போராடுவேன். எனக்கு கொஞ்சம் தனிப்பட்ட இடம் தேவை, என் சூழ்நிலையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன் என்று நடிகை சாய் ரித்து மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் சாய் ரித்து என்ன நோயால் பாதிக்கப்பட்டார் என்பதை சொல்லவில்லை. ஆனால், அவர் உருக்கமாக பேசி இருப்பதைப்பார்த்தவர்கள் ஏதோ கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என இணையத்தில் அவருக்கு ஆறுதலான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











