Super Singer 11: அம்மாவை உட்கார வைத்து அழவைத்த சரண் ராஜ்.. மனுசன் உசுருக்குள்ள சூடு வைக்கிறாரு!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 11 வெற்றிகரமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வாரா வாரம் நடுவர்களை மட்டும் இல்லாமல், ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறார்கள். அதில் பலரது கவனத்தை ஈர்த்தவர் சரண் ராஜ். இவர் இந்த சீசன் முழுவதும் இளையராஜா பாடல்களைத்தான் தான் பாட போகிறேன் என்று முடிவெடுத்து பாடி வருகிறார். இந்நிலையில் இன்று, தனது அம்மாவை அமர வைத்து அவர் பாடிய பாடலான, " என் தாய் எனும் கோயிலை காக்க மறந்துட்ட பாவியடி கிளியே" என்ற பாடலைப் பாடி, ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளார். இது தொடர்பாக இணையவாசிகள் சரண் ராஜைப் பாராட்டி வருகிறார்கள்.


அதாவது இந்த வாரத்தில் அவர் அரண்மனைக்கிளி படத்தில் இடம் பெற்ற பாடலான, என் தாய் எனும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே என்ற பாடலைப் பாடியுள்ளார். இது மட்டும் இல்லாமல் இந்த பாடலை அவர் பாடும்போது, தனது தாயாரை தனக்கு அருகில் அமர வைத்து பாடி உள்ளார். அவர் ஒவ்வொரு வரிகளையும் பாடப் பாடப் சக போட்டியாளர்கள் உட்பட ரசிகர்கள், நடுவர்கள் என அனைவரும் மெய் மறந்து போனார்கள் என்றுதான் கூறவேண்டும். சிலர் அழுதே விட்டார்கள்.

Vijay TV Super Singer 11 this Week Contestant SaranRaj Mesmerizing Performance Goes Trending
Photo Credit:

ரசிகர்கள் பாராட்டு: இந்நிலையில் இணைய வாசி ஒருவர், சரண் ராஜ் இந்த பாடல் பாடியது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. " இந்த சூப்பர் சிங்கர் 11 இல் வர்ற சரண் ராஜ் வாரவாரம் அழுக வெச்சிடறாப்லயா.இளையராஜா பாடல்கள் மட்டுந்தான் பாடுவாரு எல்லா வாரமும்! அதேபோல ராஜா மாதிரியே செம ஒரிஜினலான Rooted ஆன குரல் வளம் மற்றும் பாடும் திறனும் கொண்டுள்ளார். அவருக்கு இயல்பாகவே பாடும் திறமை உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு பல இணையவாசிகளும் லைக்குகளை வரி வழங்கி வருகிறார்கள். மேலும் அவர் பாடல் பாடும்போது கேட்பவரின் உசுருகுள் சென்று ஆன்மாவில் ஏதோ செய்கிறது என்று பாராட்டும் ரசிகர்களும் இருக்கிறார்கள். சரண் ராஜ்க்கு இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, டீ சர்ட் பரிசளித்திருந்தார்.

More from Filmibeat

Read more about: vijay tv ilayaraja super singer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X