For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜய் டிவி சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலே... ஜெயிக்கப் போவது யாரு?

By Mayura Akilan
|

சென்னை: ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 5 தனது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இறுதிச்சுற்று இன்று மாலை சென்னை ஜெயின் காலேஜ் மைதானத்தில், நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வருடமாக பல பாடகர்கள், வித்வான்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரிட்சைகளையும் கடந்து வந்த ஐந்து இறுதிப் போட்டியாளர்கள், ஃபரிதா (SS02), ஆனந்த் அரவிந்தாக்ஷன் (SS05), சியாத் (SS04), ராஜா கணபதி (SS03) மற்றும் லக்ஷ்மி ப்ரதீப் (SS07) ஆகியோர் இறுதிச்சுற்றில் பங்கேற்கின்றனர். இவர்களில் சூப்பர் சிங்கர் பட்டம் வெல்லப்போவது யார் என்பது ரசிகர்கள் ஆவலை அதிகமாக்கியுள்ளது.

விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 5. இன்றைக்கு இறுதிச்சுற்று. நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஐந்தாவது சீசனிலும் ஃபைனலைத் தொட்டுவிட்டது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

இன்று வெள்ளித்திரையில் பின்னணி பாடகர்களாக வலம் வரும் சூப்பர் சிங்கர்ஸ், இந்த பிரமாண்ட மேடையில் பல இசை ஜாம்பவான்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் முன் பாடி அற்புதமான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டனர்.

இந்த முறை கிராண்ட் ஃபினாலே லைவ் இன்னும் பிரமாண்டமாய் அரங்கேரவிருக்கிறது. பிரபல பாடகர்காளான கானா பாலா, சித் ஸ்ரீராம் பார்வையாளர்களை இசையால் உற்சாகப்படுத்த உள்ளனர்.

போட்டியாளர்களுக்கு இரண்டு சுற்றுமே ஃப்ரீ ஸ்டைல் வகையில் அமையும், மேலும் போட்டியாளர்கள் பியானோ இசைக் கலைஞர் ஸ்டீபன் தேவஸ்ஸியின் இசையில் பாடவுள்ளனர்.

சூப்பர் சிங்கரின் ஆஸ்தான நடுவர்கள் மற்றும் பாடகர்கள் சித்ரா, மஹாராஜன், மால்குடி சுபா, உஷா ஊத்துப், மனோ மற்றும் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்ப்பார்கள்.

மேலும் இந்த சீசனின் டாப் போட்டியாளர்கள், பாடகர் மனோ மற்றும் ஸ்ரீனிவாஸ்வுடன் சேர்ந்து இசை விருந்தளிக்க உள்ளார்கள். இன்னும் பல பாடல்களும், கச்சேரிகளும், வியக்கவைக்கும் இசை விருந்துகளும் அரங்கேரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சியாத்

சியாத்

சொந்த ஊரு பாலக்காடு, கேரளா. டிகிரி முடிச்சிட்டு இப்போ முழு நேரமா மியூசீஷியனா இருக்கும் சியாத் அதிகமா முஸ்லிம் சாங்ஸ் தான் பண்ணிட்டு இருந்தார். கோயம்புத்தூர் ஆடிஷன்ல தான் என் ஃப்ரெண்ட் மூலமா இந்த போட்டிக்குள்ள வந்தார். அம்மா, அக்கா, அண்ணாவும் நல்லா பாடகர்கள். பாட்டு மட்டுமில்லாம பியானோவும் நல்லா வாசிப்பாராம்.

ஃபரிதா,

ஃபரிதா,

கல்யாணம் இரண்டு குழந்தைகள் என செட்டிலான ஃபரிதா இந்த வெற்றிதான் என் வாழ்க்கைக்கு ஒரு பெரிய சப்போர்ட்டா இருக்கும் என்கிறார். இருந்தாலும் அந்த ஸ்டேஜ்ல நிக்கறதே ஒரு பெரிய விஷயம் தான். ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க .பிரம்மாண்ட ஸ்டேஜ் , லைவ். என்ன நடக்குமோனு இருக்கு. நம்பிக்கையோட இருக்கேன் என்கிறார்.

ராஜகணபதி

ராஜகணபதி

மதுரைக்குப் பக்கத்துல மேலூரைச் சேர்ந்தவர் ராஜ கணபதி. +2 படிச்சிட்டு இருக்கார். ஃபைனலுக்குக் கூட மேத்ஸ் எக்ஸாம் எழுதிட்டு தான் வரப் போறார். ஃபர்ஸ்ட் ஸ்டேண்டட்ல இருந்து கர்னாடிக் மியூசிக் கற்றுக்கொண்டதால் இப்போ இங்க வந்து நிற்கறார். பார்க்கறவங்கள எண்டெர்டெயின் பண்ணணும்! அதுதான் என்னோட குறிக்கோள். வீட்ல செம சப்போர்ட் என்கிறார்.

ஆனந்த் அரவிந்தாக்ஷன்

ஆனந்த் அரவிந்தாக்ஷன்

பி.காம் படிச்சுட்டு சவுண்ட் இன்ஜினியரிங் படிச்சிருக்கார். எதிர்காலத்துல நிறைய பாட்டு ரிலீஸ் பண்ணணும். எல்லாத்துக்கும் மேல இந்த டைட்டில் ஃபரிதா அக்காவுக்கு கிடைக்கணும்னு ஒரு ஆசை இருக்கு. எங்களையெல்லாம் விட அவங்க வாழ்க்கைக்கு இது ரொம்பவே உதவியா இருக்கும். நாங்க எல்லாருமே ஓட்டு போட்டாக் கூட ஃபரிதா அக்காவுக்குதான் போடுவோம் என்கிறார்.

லட்சுமி

லட்சுமி

மெட்டிரியல் சைன்ஸ் & மெட்டியோராலஜி (material science and meteorology) ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறார். எனக்கு டைட்டில் வின் பண்ணணும்னு ஆசை இருந்தாக் கூட ஃபர்ஸ்ட் நான் நல்லா பாடணும்.நான் எடுத்துகிட்ட பாட்ட முழுமையா சரியா பாடணும். இது முடிஞ்ச உடனே அடுத்து ஸ்டடீஸ் முடிக்கணும். அப்பறம் திரும்ப மியூசிக் எனக்கு மொழி பிரச்னை இல்லை மியூசிக்ல பெரிய ஆளா வரணும் என்கிறார் லட்சுமி.

English summary
After the tough wild card round Anand Aravindakshan and Lakshmi Pradeep made it to the finals and joined the direct finalists Fareedha, Siyad, Raja Ganapathy .
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more