»   »  தளபதி ரசிகர்களுக்கு விஜய் டிவியின் 'ஸ்பெஷல்' விருந்து

தளபதி ரசிகர்களுக்கு விஜய் டிவியின் 'ஸ்பெஷல்' விருந்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஏப்ரல் 3ம் தேதி ஒளிபரப்புவதாக விஜய் டிவி அறிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்தின் இசை வெளியீடு கடந்த 20 ம் தேதி சத்யம் திரையரங்கில் விமரிசையாக நடைபெற்றது.


விஜய் ரசிகர்கள் பலரும் இந்த விழாவை நேரில் பார்க்க முடியவில்லை என்று வருத்தத்தில் இருந்தனர். தற்போது அவர்களின் வருத்தத்தை துடைக்கும் வேலையில் விஜய் டிவி இறங்கியுள்ளது.


தெறி

தெறி

புலி படத்திற்குப் பின் நீண்ட மாதங்கள் கழித்து விஜய் நடிப்பில் வெளியாகும் படம் தெறி. விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இப்படத்தில் அவர் பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். இதில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிதிருக்கின்றனர்.


சத்யம் திரையரங்கில்

சத்யம் திரையரங்கில்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 20ம் தேதி சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் விஜய், பேபி நைனிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். பொதுவாக விழா மேடைகளில் அதிகம் பேசாத விஜய் இந்த விழாவில் குட்டிக்கதைகள், மாவோ என்று பல விஷயங்களை மைக் பிடித்து பேசினார்.


பாஸ் இருந்தும்

பாஸ் இருந்தும்

கடுமையான கெடுபிடிகள் காரணமாக விழாவிற்கான பாஸ் வைத்திருந்தும் நிறைய ரசிகர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. இது அவரின் ரசிகர்களிடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் விஜய்யின் பேச்சை நேரில் கேட்க முடியவில்லை என்றும் வருத்தப்பட்டனர்.
விஜய் டிவி

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு குதூகலம் அளிக்கும் வகையில் விஜய் டிவி, தெறி இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 3 மணியளவில் தெறி இசை வெளியீட்டை விஜய் டிவி ஒளிபரப்புகிறது.


அட்லீ

படத்தின் இயக்குநர் அட்லீயும் இந்த செய்தியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் பேச்சைக் கேட்க தாங்கள் கத்துக் கொண்டிருப்பதாகக் தெரிவித்துள்ளனர்.


எது எப்படியோ விஜய் டிவியில் தெறி இசை வெளியீட்டு விழாவை இனி அடிக்கடி கண்டு மகிழலாம்...English summary
Vijay TV Aired Theri Audio Launch on Sunday, 3rd April.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil