Don't Miss!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Automobiles
தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஒருவேளை இவரும் சீரியல் பார்த்திருப்பாரா? சொந்த சீரியலையே கலாய்க்கும் விஜய் டிவி
சென்னை : தங்கள் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலையே கலாய்த்து விஜய் டிவி ட்விட்டரில் கருத்து போட்டிருப்பதை பார்த்து விட்டு பலரும் ஷாக்காகி உள்ளனர். இதை வைத்தே விஜய் டிவி.,யை நெட்டிசன்கள் கலாய்த்து, கழுவி ஊற்றி வருகிறார்கள்.
விஜய் டிவி.,யில் பிரபலமாக இருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ஒரு காலத்தில் டிஆர்பி.,யில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் லீட் ரோலில் நடித்து வந்த ரோஷினி ஹரிபிரியன் மாற்றப்பட்டது தான் என கூறப்படுகிறது.
நயனை நினைத்து எழுதியிருப்பாரோ? 2 மில்லியன் பார்வைகளை கடந்த நான் பிழை பாடல்

கண்ணம்மாவை ஏற்காத ரசிகர்கள்
சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார் ரோஷினி. அவருக்கு பதில் விதுஷா, கண்ணம்மா ரோலில் மாற்றப்பட்டார். ஆனால் இந்த ரோலுக்கு அவர் செட் ஆகவில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அதிலும் லாஜிக்கே இல்லாமல் பல விஷயங்களை புகுத்தி, கதையை எப்படியோ கொண்டு போகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருந்தது.

திரும்பி வந்த வெண்பா
இதற்கிடையில் வில்லியான வெண்பா கேரக்டரில் நடித்த ஃபரீனாவும் பிரசவம் காரணமாக சீரியலில் இருந்து சிறிது பிரேக் எடுத்தார். இதனால் வெண்பா கேரக்டர் ஜெயிலில் இருப்பது போல் காட்டி சமாளித்தார்கள். தற்போது ஃபரீனா மீண்டும் நடிக்க திரும்பி இருப்பதால் சீரியல் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.

சீரியலை கலாய்த்த விஜய் டிவி
இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் சாமியார் ஒருவர் பாரதியிடம் வந்து அட்வைஸ் செய்வதாக காட்டப்படுகிறது. இந்த ப்ரோமோவோடு, ஒருவேளை இவரும் பாரதி கண்ணம்மா சீரியல் பார்ப்பாரோ என்ற கேப்ஷனையும் விஜய் டிவி பதிவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த சீரியலை சோஷியல் மீடியாவில் பலர் கழுவி ஊற்றி வருகிறார்கள். இதில் தங்கள் சேனல் சீரியலை கலாய்த்து, வாண்டடாக வந்து வசமாக மாட்டிக் கொண்டுள்ளது விஜய் டிவி.
Recommended Video

இப்போ இது தேவையா
இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு, யார் இந்த போலி சாமியார். இது வேண்டுமென்றே மூட நம்பிக்கையை திணிப்பது போல் உள்ளது. இப்போது எதற்காக தேவையில்லாமல் இந்த சாமி என்ட்ரி சீன். இதற்கு பதிலாக டிஎன்ஏ டெஸ்ட் செய்ய வைத்து, அவருக்கு உண்மை புரியும் படி காட்டி இருக்கலாமே என பலவிதமாக கேள்வி கேட்டு துளைத்து வருகிறார்கள்.