»   »  சரத்குமார் தயாரிக்கும் விஜய் டிவியில் விண்ணைத்தாண்டி வருவாயா சீரியல்

சரத்குமார் தயாரிக்கும் விஜய் டிவியில் விண்ணைத்தாண்டி வருவாயா சீரியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சரத்குமார் தயாரிக்கும் புதிய சீரியல் விண்ணைத்தாண்டி வருவாயா விஜய் டிவியில் அக்டோபர் 3ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை சீரியலில் நடித்த விக்ரம் ஹீரோவாகவும், மதுமிலா கதாநாயகியாகவும் நடிக்கிறார்.

சன்டிவியில் ராடான் நிறுவனம் மூலம் ராதிகா சீரியல்களை தயாரித்து ஒளிபரப்பி வருகிறார். ராதிகாவின் சீரியல்களுக்கு சமீபகாலமாக செக் வைத்து வருகிறது சன்டிவி நிறுவனம். ராதிகா சீரியல் ஒளிபரப்பும் நேரத்தில் குஷ்புவின் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சரத்குமார் புதிய சீரியல் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி விஜய் டிவியில் தனது முதல் சீரியலை தொடங்கியுள்ளார். சுந்தர் கே.விஜயன், சரத்குமாரின் சீரியரை இயக்குகிறார்.

விண்ணைத் தாண்டி வருவாயா?

விண்ணைத் தாண்டி வருவாயா?

விண்ணைத் தாண்டி வருவாயா என்று சீரியலுக்கு பெயர் வைத்துள்ளனர். காதல் கதை. பேய், மாந்திரீகம் சீரியல்களுக்கு மத்தியில் காதல் சீரியலை ஒளிபரப்புகளுக்கு விஜய் டிவி. இந்த சீரியலில் விக்ரம் - மதுமிலா நடிக்கின்றனர்.

பாடகி மதுமிலா

பாடகி மதுமிலா

விண்ணைத்தாண்டி வருவாயா சீரியலில் பாடகியாக நடிக்கிறார் மதுமிலா. பாட்டுப்போட்டியில் பரிசு வெல்கிறார் மதுமிலா. பரிசளிப்பவர் சரத்குமார். இதன் மூலம் சின்னத்திரையில் தான் தயாரிக்கும் சீரியலில் முதன்முறையாக நடித்துள்ளார் சரத்குமார்.

நான் ரெடி நீங்க ரெடியா?

நான் ரெடி நீங்க ரெடியா?

ராதிகா தயாரித்த கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு வந்தார் சரத்குமார். இப்போது தனியாக புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி விஜய் டிவியில் சீரியல் தயாரித்து வருகிறார். விரைவில் அவரும் சீரியலில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

சின்னத்திரையில் வெற்றி

சின்னத்திரையில் வெற்றி

சினிமா தயாரிப்பாளராக தொடங்கி வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவாக வெற்றி பெற்று அரசியல்வாதியாக வலம் வந்த சரத்குமார் தற்போது சின்னத்திரை தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay TV Vinnaithandi Varuvaya Serial First Episode Telecast on October-3-2016, Vijay TV Monday to Saturday 7:30 PM

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil