சின்ன கலைவாணர் விவேக்...நினைவஞ்சலி செலுத்தும் விஜய் டிவி

சென்னை : ரசிகர்களை கவரும் விதமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் பகல் 3 மணிக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது விஜய் டிவி. அளவில்லாத பொழுபோக்கிற்காக விதவிதமாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Vijay tv will tribute actor vivek on august 29 th as chinna kalaivanar vivek special program

அந்த வரிசையில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சின்ன கலைவாணர் விவேக் என்ற நிகழ்ச்சியை ஆகஸ்ட் 29 ம் தேதி பகல் 3 மணிக்கு விஜய் டிவி வழங்க உள்ளது. இந்த சின்னத்திரை பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் பலர் ஒன்றிணைந்து விவேக்கிற்கு நினைவஞ்சலி செலுத்த உள்ளனர்.

Vijay tv will tribute actor vivek on august 29 th as chinna kalaivanar vivek special program

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து, நகைச்சுவை மன்னனாக ரசிகர்களின் மனங்களை ஆட்சி செய்தவர் நடிகர் விவேக். அவரது திடீர் மறைவு உலகம் முழுவதிலும் உள்ள விவேக்கின் ரசிகர்களால் இன்று வரை மறக்க முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத நிகழ்வாகவே இருந்து வருகிறது.

இந்தியன் 2, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த நடிகர் விவேக், ஏப்ரல் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். நடிகர் மட்டுமின்றி எழுத்தாளர், சமூக ஆர்வலர், இயற்கை ஆர்வலர் என பல முகங்களைக் கொண்ட விவேக் தனது வாழ்நாளில் 33 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

Vijay tv will tribute actor vivek on august 29 th as chinna kalaivanar vivek special program

விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக விவேக்கின் குடும்பத்தினர்கள், நண்பர்கள், தமிழ் சினிமா உலகினர் ஆகியோரை ஒன்றிணைத்து இந்த சிறப்பு நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்த உள்ளது. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், காமெடியன்கள் அனைவருடனும் பணியாற்றி, அனைவராலும் கொண்டாடப்பட்டவர் சின்ன கலைவாணர் விவேக்.

இந்த நிகழ்ச்சியில் விவேக்கின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு விவேக் பற்றிய தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்ள உள்ளனர். விஜய் டிவி நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காமெடி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

Vijay tv will tribute actor vivek on august 29 th as chinna kalaivanar vivek special program

இந்த நிகழ்ச்சி தொடர்பான ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X