ஆரம்பிக்கலாங்களா...கமல் பங்கேற்கும் விக்ரம் ஸ்பெஷல்...எப்போ தெரியுமா?
சென்னை : விக்ரம் பட ப்ரோமோஷனுக்காக ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்று விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. கமல் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
Recommended Video
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் ப்ரோமோஷன் வேலைகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்தியன் 2 நிச்சயம் வரும்
சமீபத்தில் விக்ரம் ப்ரோமோஷனுக்கான பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, மீடியாக்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தனர். இதில் கமலிடம் இந்தியன் 2 படம் பற்றி கேட்டதற்கு, இந்தியன் 2 நிச்சயம் வரும். படத்தின் ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது என்றார்.

விக்ரம் 3 வந்தால்...
அதோடு விக்ரம் 3 படமும் வர உள்ளதாக சஸ்பென்சை உடைத்த கமல், விக்ரம் 3 உருவானால் அதற்கு லோகேஷ் கனகராஜ் தான் டைரக்டராக இருப்பார் என்று கூறி, அனைவரின் ஆர்வத்தையும் தூண்டினார். அதோடு சினிமாவை வடக்கு, தெற்கு ஏன் பிரிக்கிறீர்கள். நான் இந்தியன். சினிமா அனைவருக்கும் பொதுவானது என பேசினார். சமீபத்தில் இதே போன்ற கருத்தை பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், கங்கனா ரணாவத் ஆகியோரும் முன் வைத்தனர்.

விக்ரம் ஸ்பெஷல் நிகழ்ச்சி
இந்தியாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் விக்ரம் ப்ரோமோஷன் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக விக்ரம் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்று விஜய் டிவியில் நடத்தப்பட உள்ளது. விக்ரம் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி தான் வாங்கி உள்ளது. சமீபத்தில் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவின் ஒளிபரப்பு உரிமத்தையும் விஜய் டிவி தான் வாங்கி இருந்தது. இந்த சமயத்தில் விஜய் டிவியில் மே 29 ம் தேதி விக்ரம் ஸ்பெஷல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

பால்ராம் நாயுடுவாக மாறிய கமல்
பிரபல தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், சாண்டி மாஸ்டர் மூவரும் கலந்து கொண்டு விக்ரம் படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்பிக்கலாங்களா என கேட்டபடி கமல் என்ட்ரி கொடுக்க, டிடி.,யில் கேள்விகளுக்கு கமலும், லோகேஷும் கலகலப்பாக பதிலளிக்கின்றனர். தசாவதாரம் பல்ராம் நாயுடு குரலில் பேசி கமல் அனைவரையும் அசர வைத்துள்ளார். மே 29 ம் தேதி காலை 11 மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











