twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னத்திரையில் அசத்தும் வில்லிகள்…

    By Mayura Akilan
    |

    சினிமாவில் வில்லன்கள் என்றால் கொடூர முகமும்... ஹ ஹ ஹ என்ற சிரிப்பும்... அதட்டு உருட்டுகிற பேச்சும் வேண்டும் என்ற காலம் மலையேறிவிட்டது.

    ஒயிட்காலர் வில்லன்கள்தான் இன்றைக்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர். சின்னத்திரையிலோ, அத்தையாக, அண்ணியாக, அத்தை மகளாக, நாத்தனாராக வில்லத்தனம் செய்கின்றனர் அழகான பெண்கள்.

    சீரியலின் வில்லிகள் மூலம்தான் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறுகிறது என்கிறார் சின்னத்திரை தயாரிப்பாளர் குஷ்பு... அவ்வாறு இல்லத்தரசிகள் அதிகம் ரசிக்கும் மோஸ்ட் வாண்டட் வில்லிகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

    வடிவுக்கரசி

    வடிவுக்கரசி

    அழுகை அம்மாவாக அதிக சீரியல்களில் நடித்த வடிவுக்கரசி சன் டிவியில் வம்சம் தொடரில் சிரித்துக் கொண்டே அண்ணாச்சி குடும்பத்தை கெடுக்கும் நாகவல்லியாக நடித்திருக்கிறார். இந்த ஸ்டைல் ரொம்ப சூப்பர் என்கின்றனர்.

    ராணி

    ராணி

    அலைகள் தொடரில் இருந்து பல தொடர்களில் வில்லியாக நடித்த அனுபவம் ராணிக்கு உண்டு. அத்திப்பூக்கள் தொடர்தான் அதிகம் பிரபலப்படுத்தியது. இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் வள்ளி தொடரில் லேடி தாதா ‘சேனா'வாக அசத்துகிறார்.

    திவ்யபாரதி

    திவ்யபாரதி

    குழந்தை நட்சத்திரமாக 20 படங்களில் நடித்த திவ்யபாரதி பிள்ளை நிலா தொடரில் வில்லியாக நடிக்கிறார். இவரின் வில்லத்தனத்திற்கு மலேசியாவில் கூட ரசிகர்கள் இருக்கிறார்களாம்.

    ஸ்ரீதேவி

    ஸ்ரீதேவி

    வாணி ராணி தொடரில் டார்ச்சர் செய்யும் அத்தைப் பெண்ணாக நடிக்கிறார் ஸ்ரீதேவி. வில்லத்தனம் செய்வதற்காக முகத்தில் மச்சம் ஒட்டிக் கொண்டாராம். இதுவரை 15 சீரியல்களில் நடித்திருந்தும் வாணி ராணி சீரியல்தான் அனைத்து பெண்களிடமும் கொண்டு போய் சேர்த்து திட்டு வாங்க வைத்திருக்கிறதாம்.

    பூஜா

    பூஜா

    சன் டிவியில் முந்தானை முடிச்சு... முத்தாரம் தொடர்களில் வில்லியாக கலக்கும் பூஜா நிஜத்தில் ரொம்ப நல்ல பெண்ணாம். ஆனால் இவரை திட்டி குவிக்கிறார்கள் பெண்கள். வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதை வைத்தே வில்லத்தனத்தின் பாதிப்புகளை உணர்ந்து கொண்டுள்ளாராம் பூஜா.

    சரிதா

    சரிதா

    ஜெயா டிவியில் ரங்க விலாஸ் தொடரில் வில்லியாக நடிக்கிறார் சரிதா. பூ, பழசிராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். முதல் சீரியலிலேயே வில்லி பாத்திரம் கிடைத்துவிட்டது. அடுத்த தொடர்களில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்க ஆசை என்கிறார்.

    English summary
    Villis are better than heroines in TV serials most of the time. Here are some villis who are terrorising the small screen.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X