»   »  டிவி சீரியல்களில் அதிகரிக்கும் வன்முறைகள்!... ஓவர் வில்லத்தனம் செய்யும் அண்ணிகள்!!

டிவி சீரியல்களில் அதிகரிக்கும் வன்முறைகள்!... ஓவர் வில்லத்தனம் செய்யும் அண்ணிகள்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி சீரியல் அண்ணிகள் அதீத கொடுமைக்காரிகளாகவும், கொலைக்கு அஞ்சா பிசாசுகள் போலவும் சித்தரிக்கப்படுகின்றனர். நாத்தனாரின் திருமணத்தை நிறுத்துவது, கருவை கலைப்பது. குடும்பத்தை கெடுப்பது. புகுந்த வீட்டினரை கதற வைப்பது என டிவி சீரியல்களில் வரும் அண்ணி கதாபாத்திரம் பெரும்பாலும் வில்லியாக சித்தரிக்கப்படுவதால் அண்ணி என்றாலே அலறும் நிலைக்கு வந்து விட்டனர் சீரியல் பார்க்கும் பொது ஜனங்கள். ரீல் அண்ணிகளினால் தியாக மனப்பான்மையுடன் இருக்கும் ரியல் அண்ணிகள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை.

சித்தி என்றாலே வில்லி என்று சித்தரித்து அந்த புண்ணியத்தை திரைப்படங்கள் கட்டிக்கொண்டன என்றால் அண்ணி என்றாலே அலறவைக்கும் வில்லி என்று கதாபாத்திரங்களை சித்தரிக்கின்றன டிவி தொடர்கள். இதனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் அண்ணி என்றாலே எதிரியை பார்ப்பது போல பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

டிவி சீரியல்கள் இன்றைக்கு குடும்ப உறவுகளை சிதைக்கும் அளவுக்கு ஆக்கிரமித்து விட்டன. அறிவுக்கான விவாதங்கள், கண்டுபிடிப்புகள், நிகழ்வுகள், இயற்கையின் அற்புதங்கள் என எவ்வளவோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், இல்லத்தரசிகள், வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் வீட்டுக்குச் சென்றதும்,சீரியல்களில் மூழ்கிவிடுகின்றனர்.

உறவுகளில் சிக்கல்

உறவுகளில் சிக்கல்

பல குடும்பங்களில் உறவு சார்ந்த சிக்கல்களும்,டிவி தொடர்களை பார்க்கும் பெண்கள், அதை பார்க்கும் நேரங்களில் தங்களையே மறந்து விடுகின்றனர். உறவினர்கள் வீட்டுக்கு செல்வது, விருந்தினர்களை வரவேற்பது சமையல் உள்ளிட்ட பணிகளில் பெண்களுக்கு நாட்டம் குறைகிறது.

பெண்களின் மனநிலை

பெண்களின் மனநிலை

குழந்தைகளுக்கான உணவு பரிமாறும் நேரம், அவர்களை கவனிக்கும் நேரம் கூட டிவி சீரியல்களினால் குறைந்து விட்டது. இதன் காரணமாக, குழந்தைகளும் டிவி நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகி, தங்கள் பணிகளையும் செய்ய இயலாத நிலையுள்ளது.

குரோத எண்ணங்கள்

குரோத எண்ணங்கள்

டிவி தொடர்களில், மாமியார், மருமகள்களை எதிரிகளாக சித்தரிப்பதால், குடும்பங்களில் மன உறுதி இல்லாத பல பெண்கள், நிஜத்திலும் குரோத எண்ணங்களை உருவாக்கிக் கொள்கின்றனர்.

வில்லி அண்ணிகள்

வில்லி அண்ணிகள்

பெண்களை மையப்படுத்தி சீரியல் எடுக்கப்பட்டாலும் சில கதாபாத்திரங்கள் குறிப்பாக அண்ணிகள் குடும்பத்திற்குள்ளேயே சதி செய்வதாக சித்தரிப்பது, குடும்பங்களில் உள்ள உறவுகளுக்குள் சண்டைகள் உருவாக காரணமாகிறது.

விவகாரத்து கதைகள்

விவகாரத்து கதைகள்

சீரியல்களில் பெரும்பாலும் இருதாரத்தை ஆதரிக்கிறது. தவிர கள்ள உறவுகளுக்கு கடை விரிக்கும் இதுபோன்ற தொடர்களை பின்பற்றுவதால்தான் நிஜ வாழ்க்கையில் சண்டைகளும் இதனால் விவாகரத்து தற்கொலை முயற்சி மற்றும் கொலை முயற்சியிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள்.

ரியல் அண்ணிகள் கவலை

ரியல் அண்ணிகள் கவலை

டிவி சீரியலில் ராதிகாவும் கூட நல்ல அண்ணியாகத்தான் நடித்திருக்கிறார். ஆனால் நம்ம மக்கள்தான் நல்லது சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள அதிக காலம் எடுத்துக்கொள்வார்களே. அதே சமயம் தீயதை ஒருமுறை சொன்னால் உடனே அதையே பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள். சீரியல்களில் வரும் அண்ணிகளால் எல்லா அண்ணிகளுமே பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என்கின்றனர் ரியல் அண்ணிகள்.

வன்முறைகள்

வன்முறைகள்

18 வயதை அடையும் முன் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வன்முறைக்காட்சிகளைப் பார்ப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பிள்ளைகள் தங்களின் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கிறார்கள் என்பதை சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வியாபார நோக்கம்

வியாபார நோக்கம்

பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு, அரவணைப்பு, அர்ப்பணிப்பு போன்ற உயர்ந்த குணங்களை பெண்கள் தொலைக்காட்சி தொடர்களால் இழந்து வருகின்றனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இன்றைய தொடர்கள் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கவும், வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்படுகின்றன என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தணிக்கை சான்றுகள்

தணிக்கை சான்றுகள்

இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சேனல்களுக்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிக்கும்படியான, தரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Studies show that violence on television does have an adverse affect on children and the way they think and act. This is true not only for young children, but some recent studies indicate that watching violence on television can even impact adults.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more