twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தந்தி' தொலைக்காட்சியில் விஸ்வரூப வில்லங்கம்

    By Mayura Akilan
    |

    கமல் இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையினால் திரைப்படத்துறையின் எதிர்காலம் பற்றி தந்தி தொலைக்காட்சியின் 'ஆயுத எழுத்து' நிகழ்ச்சியில் மிகச் சிறப்பான விவாதம் நடைபெற்றது.

    இந்த திரைப்படத்திற்கு தடை விதித்த இஸ்லாமிய அமைப்பைப்ச் சேர்ந்தவர்களும், திரைத்துறை சார்பில் நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோர் பங்கேற்றனர்.

    திரைப்படத்தை முன்னதாகவே பார்வையிட்டும் அதற்கு தடை கோரியது சரியா? என்ற ரீதியில் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சியமைப்புகள் உள்ளது என்றும் இஸ்லாமியர்கள் மட்டும்தான் தீவிரவாதிகளாக உள்ளனரா? எங்கள் சமூகத்தைப் பற்றி மட்டும் ஏன் திரைப்படத்தில் சித்தரிக்க வேண்டும் என்றும் வலியுடன் கேள்வி எழுப்பினர் இஸ்லாமிய அமைப்பினர்.

    திரைப்படத்திற்கு சென்சார் போர்டு இருக்கிறது. விஸ்வரூபம் திரைப்படத்தை நான்கு மாநில சென்சார் போர்டு அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். ஆனாலும் இதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அப்புறம் நாங்கள் யாரை நம்பி படம் எடுப்பது. 100 கோடி செலவு செய்து எடுத்த கமல்ஹாசன் இந்த பிரச்சினையில் தைரியமாக போராடுகிறார். ஆனால் வேறு தயாரிப்பாளராக இது போன்ற தடையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று கூறினார் ரமேஷ் கண்ணா.

    நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையேயும் சூடு பறந்தது. நாங்கள் நடிகர் கமல்ஹாசனுக்கோ, தமிழ் சினிமாவுக்கோ எதிரியில்லை. ஆனால் மத உணர்வுகளை புண்படுத்தாமல் படம் எடுத்தால் நாங்கள் ஏன் தடை செய்யப் போகிறோம் என்று கேள்வி எழுப்பினர்.

    English summary
    Debate on Viswaroopam Movie ban Thanthi TV special show Ayutha ezhuthu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X