Bigg Boss 9: அறிவே இல்லையா.. பெண் போட்டியாளரை பார்த்து இப்படியா சொல்லணும்.. எஃப்ஜேவை விளாசிய வியன்னா!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 முதல் வாரத்தை கடந்து 2வது வாரம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கொஞ்சி கொஞ்சி பேசிக் கொண்டிருந்த வியன்னாவை பார்த்து ஸ்ட்ரிப் கிளப்பில் ஆடுவது போல ஆடுகிறார் என FJ அடித்த கமெண்ட் அவரை அழ வைத்து விட்டது. அனைவரும் இருக்கும் போது என்னை பார்த்து எப்படி அப்படி சொல்லலாம் என வியன்னா கேட்டு விட்டார்.
அரோரா சின்க்ளேர் உடன் ஒட்டி உரசி வெப்சீரிஸில் நடித்த FJ பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் சீசன் 9ல் ஏகப்பட்ட இன்ஃப்ளூயன்சர்கள் உள்ளே உள்ள நிலையில், முதல் நாளில் இருந்தே தேவையற்ற சண்டைகளை அதிகம் போட்டு கன்டென்ட் கொடுக்கிறேன் என கடுப்பேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், வியன்னா குறித்து FJ பேசிய காட்சிகளை பலரும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து எஃப் ஜேவை விளாசி வருகின்றனர்.
ஸ்ட்ரிப் கிளப்னு சொல்லலாமா?: பிக் பாஸ் வீட்டில் நான் என் முழு உடம்பையும் மறைத்த படியான ஆடைகளை தான் அணிந்துக் கொண்டு விளையாடி வருகிறேன். என்னை பார்த்து எப்படி ஸ்ட்ரிப் கிளப்பில் ஆடுபவர் என சொல்லலாம் என எஃப் ஜேவை நேரடியாகவே எதிர்த்து கேள்வி கேட்டு ஸ்கோர் செய்துள்ளார் வியன்னா. ஸ்ட்ரிப் கிளப் என்றால் பெண்கள் ஒவ்வொரு ஆடையாக துறந்து நிர்வாணமாக ஆடும் கிளப், அப்படி எப்படி சொல்லலாம் அது ரொம்பவே தப்பு என கம்ரூதின் வியன்னாவுக்கு ஆதரவாக பேசினார்.
ஸ்லீவ்லெஸ் போடவே: சோஷியல் மீடியாவில் ஒரு போஸ்ட் போட வேண்டும் என்றால் கூட என் பெற்றோர்களிடம் பர்மிஷன் வாங்கித்தான் போடுவேன் என்றும் கடந்த ஒரு வருடமாகத்தான் ஸ்லீவ்லெஸ் உடையை அணியவே அனுமதி பெற்றேன் என்றும் என்னை பார்த்து எப்படி அப்படி கேவலமாக பேசுவீங்க என வியன்னா கண்ணீர் விட்டு அழ அருகே இருந்த அரோரா அவரை ஆறுதல் படுத்தி தேற்றினார்.
மன்னிப்பு கேட்ட எஃப் ஜே: வியன்னா கண்ணீர் விட்டு அழுததும் மற்றவர்கள் எஃப் ஜே செய்தது தவறு என சுட்டிக்காட்ட அவரும் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுவிட்டார். பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களுக்கு ஆதரவாக ஆண் போட்டியாளர்கள் உள்ளார்கள் என அர்ச்சனா எல்லாம் பெருமையாக பேசிய சீசன் எல்லாம் முடிந்து போய்விட்டது என்றும் இப்போது அலைபவர்கள் தான் அதிகம் உள்ளார்கள் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











