»   »  கல்யாண நாளே கறுப்பு நாளாகுமா?: விடை சொல்ல வரும் 'விழியே கதை எழுது'

கல்யாண நாளே கறுப்பு நாளாகுமா?: விடை சொல்ல வரும் 'விழியே கதை எழுது'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுயுகம் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சஸ்பென்ஸ் குடும்பத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு, ஒளிபரப்பாகிறது.

திருமணம் என்பது வாழ்க்கையில் மறக்கமுடியாத இனிய அனுபவமாக அமையவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் நினைத்துப்பார்த்து சந்தோஷப்படும் தினமாக அமையவேண்டிய திருமண நாள், கண் தெரியாத சந்தியாவுக்கு மட்டும் கருப்பு தினமாக மாறிவிடுகிறது.

திருமண நாளன்று சந்தியா வாழ்க்கையில் வீசிய புயலை எதிர்த்து எப்படி வெற்றிபெற்றாள் என்பதை, 'விழியே கதை எழுது' மெகா தொடரில் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

கண் இல்லாத சந்தியா

கண் இல்லாத சந்தியா

அரசுப் பள்ளி ஆசிரியரின் ஐந்தாவது மகள் சந்தியா. நான்கு வயதில் கண் பார்வையை இழந்துவிட்ட சந்தியாவை, மூத்த நான்கு சகோதரிகளும் கண்ணுக்கு கண்ணாக பாதுகாக்கிறார்கள். கண் பார்வையை இழந்துவிட்ட சந்தியாவை எப்படி கரை சேர்ப்பது என்று தந்தை கவலைப்படும் நேரத்தில், பெரிய கோடீஸ்வரனான யுவராஜ் மாப்பிள்ளையாக வருகிறான்.

சந்தியாவின் திருமணம்

சந்தியாவின் திருமணம்

திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளை வீட்டாரின் அன்பு, பாசத்தில் சந்தியாவின் குடும்பம் ஆனந்தத்தில் திளைக்கிறது. ஊரே வியக்கும்வண்ணம் மிகவும் பிரமாண்டமாக சந்தியாவின் திருமணம் நடைபெறுகிறது.

தந்தை எங்கே?

தந்தை எங்கே?

திருமணம் முடிந்ததும் அனைவரும் சந்தியாவின் தந்தையின் ஆசிர்வாதத்திற்காக காத்திருக்க, அவரோ வரவே இல்லை. சந்தியா தந்தைக்கு என்ன நேர்ந்தது? தந்தையின் மர்மத்துக்குப் பின்னே தன்னுடைய கணவனும் அவளது குடும்பத்தாரும் இருப்பதை அறியும் சந்தியா, அடுத்து என்ன செய்யப்போகிறாள் என்பதை நோக்கி விறுவிறுப்புடன் நகர்கிறது, 'விழியே கதை எழுது' தொடர்.

புதுயுகம் தொலைக்காட்சி

புதுயுகம் தொலைக்காட்சி

ஸ்ரீதி ஜா சந்தியாவாகவும், துரு பண்டாரியாக யுவராஜும், சந்தியாவின் தந்தையாக பிரபல நடிகர் கிட்டியும் நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர குன்கன் உபராய், கவிதா கபூர், மனீஷ் ராய்சங்கனி, சுப்ரியா குமாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். விறுவிறுப்பு மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த, ‘விழியே கதை எழுது' தொடரை புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு காணத் தவறாதீர்கள். இந்தத் தொடர் மறுநாள் பகல் 12.30 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது.

English summary
Pudhuyugam Television telecast new serial Vizhiye Kathai Eluthu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil