»   »  தியோடன் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு... மனம் திறக்கும் டிவி தொகுப்பாளினி ஆர்த்தி

தியோடன் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு... மனம் திறக்கும் டிவி தொகுப்பாளினி ஆர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் தொலைக்காட்சி ஆரம்பித்து, தற்போது வானவில் தொலைக்காட்சி வரை 10 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணியாற்றி வரும் ஆர்த்தியை அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த ஆர்த்தி இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்த விவேக் குமாரை காதல் திருமணம் கொண்டார் ஆர்த்தி. திருமணம் நடந்தபோது முதல் சீர்வரிசைத் தட்டை கொடுத்து வாழ்த்தினார் பாலா.

கொஞ்சும் தமிழில் பேசி குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடத்திய ஆர்த்தி இப்போது ஒரு குழந்தைக்கு அம்மாவாகியிருக்கிறார். குழந்தையின் பெயர் தியோடன். தியோடன் என்றால் ஆட்சி செய்பவன், கடவுள் கொடுத்த பரிசு என்று அர்த்தமாம்.

மக்கள் டிவியில் இருந்து சன்டிவிக்கு சென்ற ஆர்த்தி, சூரிய வணக்கம், ராசிபலன் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். குழந்தை பிறந்த போது சேனலை விட்டு விலகினார் ஆர்த்தி. குழந்தை பிறந்து 6 மாதம் ஆன பின்னர் தற்போது வானவில் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். தனது மீடியா பயணம் பற்றி ஆர்த்தி பிரபல ஊடகத்தில் பகிர்ந்து கொண்டதை படியுங்களேன்.

சின்னச் சின்ன ஆசை

சின்னச் சின்ன ஆசை

மக்கள் தொலைக் காட்சி 2006ம் வருடம் தொடங்கப்பட்டது. அப்போதுதான் கல்லூரி படிப்பை முடித்திருந்தேன். நான் கல்லூரி முடித்து வெளியில் வந்ததும் மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. சின்ன சின்ன ஆசை, சொல் விளையாட்டு என பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன்.

தமிழ் உச்சரிப்பு

தமிழ் உச்சரிப்பு

வளாகம் நிகழ்ச்சி எனக்கு மிகப்பெரும் பெயர் எடுத்துக் கொடுத்தது. அங்குதான் தமிழ் எப்படி உச்சரிக்க வேண்டும், உடல் மொழி எப்படி இருக்க வேண்டும் என பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றிய போது கேப்டன் தொலைக்காட்சியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவேக் குமார் உடன் நட்பு ஏற்பட்டு அது காதலாகி திருமணத்தில் முடிந்தது. இப்போது 'தியோடன்' என்று அழகான ஆண் குழந்தை இருக்கிறான் என்கிறார் ஆர்த்தி.

ஆட்சி செய்பவன்

ஆட்சி செய்பவன்

தியோடன் 'theodden' என்றால் ஆட்சி செய்பவன், கடவுள் கொடுத்த பரிசு' என்று அர்த்தம். இந்த பெயரை என் கணவர்தான் தேர்வு செய்தார். குழந்தைப் பிறந்தவுடன் எனக்கு பரிசாக கொளத்தூரில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கித் தந்தார் என் கணவர் என்று மகிழ்கிறார் ஆர்த்தி.

சூரிய வணக்கம்

சூரிய வணக்கம்

எட்டு வருடங்கள் கழித்து, சன் டி.வியில் சூரிய வணக்கம், ராசி பலன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன். அதற்குப் பிறகு திருமணம் முடிந்து, ஆறு மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது. ஆறு மாதம் வேலையில்லாமல் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது தேவையில்லாத மன அழுத்தத்தைத் தந்தது என்கிறார் ஆர்த்தி.

வானவில் டிவி

வானவில் டிவி

ஆறுமாத இடைவெளிக்குப் பிறகு தற்போது 'வானவில்' தொலைக்காட்சியில் இணைந்து, 'நல்வரவு', 'திரைப்படம் உருவான கதை' என இரண்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார் ஆர்த்தி.

பாலா கேட்ட கேள்வி

பாலா கேட்ட கேள்வி

குழந்தைக்கு பிறந்தபோது இயக்குநர் பாலாவிடம் சென்று ஆசி வாங்க சென்றார்களாம். ஆர்த்தியிடம் பெயரை கேட்ட பாலா, தியோடன் என்றதும். 'நீ தமிழ் பெயர் தானே வைப்பே.. ஏன் இப்படி ஒரு பெயர்...?'னு கேட்டாராம். கணவர் தான் அந்த பெயரை செலக்ட் செய்தார் என்று கூறி சமாளித்தாராம் ஆர்த்தி.

இளமை புதுமை

இளமை புதுமை

எப்பொழுதும் நம்முடைய தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். முகம் மட்டுமல்ல மனதையும் எப்போதும் ஃப்ரெஷாக வைத்திருக்கப் பழகிக் கொண்டால் நீங்கள் எப்போதும் இளமையாகவே இருப்பீர்கள் என்கிறார் ஆர்த்தி.

English summary
Sun TV anchor Aarthi talks about her love marriage and her son Theodden.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil