வலது தொடையில் 16 தையல்… அறுவை சிகிச்சை குறித்து நேரலையில் எமோஷ்னலாக பேசிய அர்ச்சனா !

சென்னை : பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பல வாரங்களுக்குப் பிறகு நேரடி வீடியோவில் வந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

மூளையில் தனக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றி பேசிய அர்ச்சனா, எனது வலது தொடையில் உள்ள தசையை வெட்டி சிஎஸ்எஃப் கசிவை சரிசெய்ய மூக்கு பகுதியில் ஒட்டி உள்ளனர். இதனால் எனது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது என்றார்.

ரசிகர்கள் பலரும் எப்போ நிகழ்ச்சிக்கு வருவீங்க என்று கேட்கிறார்கள், எனது கால் தற்போது பலவீனமாக இருக்கிறது. அது சரியானதும் நிச்சயம் வருவேன் என்று கூறினார்.

சன்டிவியில்

சன்டிவியில்

சன் டிவி-யில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் அர்ச்சனா. அதன் பிறகு, விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்4ல் கலந்து கொண்டு கவனம் பெற்றார்.

அர்ச்சனா வீல்சேரில்

அர்ச்சனா வீல்சேரில்

இதையடுத்து, அர்ச்சனாவுக்கு சமீபத்தில் மூளையில் CSF லீக் எனப்படும் பிரச்சனை இருந்தது பரிசோதனையில் தெரிய வந்ததால் அதை சரிசெய்ய அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அர்ச்சனா, வீல்சேரில் வந்த வீடியோவை அவரது மகள் youtube சேனலில் பதிவிட்டு இருந்தார்.

குரல் மாறி இருந்தது

குரல் மாறி இருந்தது

அந்த வீடியோவில் அர்ச்சனா மிகவும் எமோஷ்னலாக பேசி இருந்தார். அவரது குரலும் அப்படியே மாறி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகி விட்டனர். அர்ச்சனாவின் பழைய கணீர் குரல் எங்கே என கமெண்ட்டில் கேட்டு வருகின்றனர். அர்ச்சனா தனது ரசிகர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் நன்றி கூறி இருக்கிறார்.

அர்ச்சனா நேரலையில்

அர்ச்சனா நேரலையில்

தற்போது உடல் நலம் தேறிவரும் அர்ச்சனா முதன்முறையாக நேரலையில் பேசினார். அர்ச்சனாவின் மகள் சாரா மற்றும் அவரது சகோதரி அனிதா ஆகியோரும் நேரலையில் வந்து அர்ச்சனாவின் அறுவை சிகிச்சை குறித்து தெரிவித்தனர். கசிவை மறைக்க பயன்படுத்தப்படும் திசு அர்ச்சனாவின் வலது தொடையில் இருந்து எடுக்கப்பட்டதாக சாரா கூறினார்.

தொடையில் 16 தையல்கள்

தொடையில் 16 தையல்கள்

இதையடுத்து பேசிய அர்ச்சனா, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க எப்போ வருவீங்க என்று பலரும் கேட்டு வருகிறார்கள். இப்போ கூட நான் வர தயாராக இருக்கிறேன். ஆனால் எனது வலது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது. தொடையில் உள்ள தசையை வெட்டி சிஎஸ்எஃப் கசிவை சரிசெய்ய மூக்கு பகுதியில் ஒட்டி உள்ளார்கள் என்றார்.

என்னால் நிற்க முடியாது

என்னால் நிற்க முடியாது

மேலும் படப்பிடிப்புக்கு வந்தால் தொடர்ந்து 15,16 மணிநேரம் செட்டில் நிற்க வேண்டும், ஆனால் தற்போது காலில் வலி இருப்பதால் என்றால் தொடர்ந்து நிற்க முடியாது. மீண்டும் பழைய நிலைக்கு நான் திரும்ப இன்னும் சில மாதம் ஆகும் என்று நினைக்கிறேன். செப்டம்பர் 3ந் தேதி மருத்துவமனையில் ஒரு பரிசோதனை இருக்கிறது. அந்த பரிசோதனைக்கு பிறகே அனைத்தும் தெரியவரும் என்று கூறினார். என் மகள் சாரா மற்றும் என் சகோதரி அனிதா இருவரும் என்னை மிகவும் அன்பாக கவனித்துக் கொண்டார்கள். இந்த அளவுக்கு என் உடல்நிலை தேறியதற்கு அவர்கள் இருவரின் கவனிப்புதான் காரணம் என்று உணர்ச்சி பொங்க அர்ச்சனா பேசினார். இந்த நேரலையை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனா நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று கூறி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X