vj manimegalai: எம்மதமும் சம்மதம்.. மணிமேகலைக்காக கணவர் செய்த செயல்.. குவியும் பாராட்டு!
சென்னை: தொகுப்பாளினி மணிமேகலை, 15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் வலம் வருகிறார். சன் நெட்வொர்க் முதல் விஜய் டிவி வரை பல சேனல்களில் பணிபுரிந்த அவர், தனது கலகலப்பான பேச்சால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். மணிமேகலை, ஹுசைன் இருவரும் மத வேறுபாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாம், காதலித்து திருமணம் செய்து, அனைத்து மத பண்டிகைகளையும் இணைந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஹுசைன் தனது மனைவிக்காக செய்த செயல் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சன் மியூசிக்கில் தனது பயணத்தை தொடங்கிய மணிமேகலை, தனது சுட்டித்தனத்தால் அனைவருக்குமே பரிட்சயமானவர். மணிமேகலை லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படத்தில் ஹுசைன் சைடு டான்ஸராக டான்ஸ் ஆடுவதை பார்த்து, இம்ப்ரஸ் ஆகி அவரிடம் பேசி இருக்கிறார். இது நாளடைவில் காதலமாக மாறி உள்ளது. இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு மதத்தவர்கள் என்பதால் அந்த சமயத்தில் இவர்களுடைய திருமணமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

தொகுப்பாளி மணிமேகலை: மணிமேகலையின் குடும்பத்தில் இவர்களுடைய திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தனர். அண்மையில் தான், மணிமேகலையின் குடும்பத்தினர் அவரோடு பேசத் தொடங்கி இருக்கிறார்கள். மதங்களை கடந்த இவர்களின் காதல், ஒவ்வொரு ஆண்டும் வலுவாடைந்து வருகிறது. ரம்ஜான் வரும்பொழுதும், தனது கணவர் ஹுசைனுக்காக நோன்பிருந்து இஸ்லாமிய முறைப்படி பண்டிகையை கொண்டாடி வருகிறார். ரம்ஜான் மட்டுமன்றி பக்ரீத், மொகரம், மிலாது நபி என எல்லாவற்றிலும் ஹுசைனுடன் அவர்கள் நம்பிக்கைப்படி கொண்டாடி வருகிறார். அதே போல ஹுசைனும் தனது காதல் மனைவிக்காக அவரின் மத பண்டிகையை கொண்டாடி வருகிறார்.
குவியும் வாழ்த்து: தற்போது ஹுசைன் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு, நெற்றியில் திருநீர் வைத்துள்ளார். சாமியே சரணம் ஐயப்ப என்ற கோஷத்துடன் ஹுசைன் மாலை போட்ட வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்த இணையவாசிகள் காதலை எந்த எம்மதங்களாம் தடுக்க முடியாது என பதிவிட்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மணிமேகலை, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியபோது, அதில் போட்டியாளராகக் கலந்துகொண்ட விஜே பிரியங்காவுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. நான் தொகுத்து வழங்கும்போது பிரியங்கா ஓவராகத் தலையிடுகிறார். எனக்கு சுயமரியாதை ரொம்பவே முக்கியம், என்று கூறி அந்த நிகழ்ச்சியிலிருந்து மணிமேலை வெளியேறினார். தற்போது மலைமேகலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











