ஓவர் சீன்.. விஜே பார்வதியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய மீனவ பொண்ணு.. பிக் பாஸ் வீட்டில் சண்டை!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த முறை விஜே பார்வதி, வாட்டர் மெலான் திவாகர், அரோரா சின்க்ளேர், கனி, அகோரி கலையரசன், பிரவீன் காந்தி, வியன்னா, ரம்யா ஜோ, துஷார், விக்கல்ஸ் விக்ரமன் என ஏகப்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிதாக ரசிகர்களை கனெக்ட் செய்யாத நிலையில், இந்த சீசன் போட்டியாளர்கள் பலரும் இன்ஃப்ளூயன்சர்ஸ் என்பதால் ஓவர் டிராமாவாக பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே சண்டை, சச்சரவு, தள்ளுமுள்ளு என சென்று கொண்டிருக்கிறது.

Vj Parvathy and Meenava Ponnu Subi clash promo from Bigg Boss Tamil 9 out now
Photo Credit:

கடந்த சீசனில் பிக் பாஸ் சின்ன வீடு, பெரிய வீடு கான்செப்ட்டை அப்படியே கொஞ்சம் பட்டி டிக்கெரிங் பார்த்து பிக் பாஸ் டூப்ளெக்ஸ் பிக் பாஸ் சாதா வீடு என ஓடிக் கொண்டிருக்கிறது.

வேலை நிறுத்தம் செய்த பார்வதி: பிக் பாஸ் சொகுசு வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருந்த பார்வதிக்கு எதிராக பிரச்னை கிளம்பிய நிலையில், இதற்கு மேல் அந்த இடத்தை தூய்மை செய்ய மாட்டேன் என வேலை நிறுத்தம் செய்து முதல் வாரத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் கவர விளையாடி வருகிறார். சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் பாரு பங்கேற்கும் போதே, இதுக்கு பதில் பிக்பாஸ் போயிருக்கலாம் என பலரும் அவரது வாய்ப்பேச்சு திறமையை பாராட்டிய நிலையில், பிக் பாஸ் வீட்டில் அதை பக்காவாக செய்து வருகிறார்.

லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய மீனவ பொண்ணு: நேர்மையாகவும் நியாயமாகவும் பேசுவது போல பார்வதி பேசிக் கொண்டே விக்கல்ஸ் விக்ரம் அருகே சென்று கேமராவை மறைக்காதீங்க நாங்களும் தெரியணும் என பாடி ஷேமிங் செய்வது போல பேசியதை நெட்டிசன்கள் கண்டித்து வரும் நிலையில், அக்கா என மீனவ பொண்ணு சுபி மன்னிப்புக்கு கேட்டது குறித்து பேச, இங்கே யாரும் அக்கா, தங்கச்சி இல்லை என பாரு சொன்னதும் என்னை கொஞ்சம் பேச விடுங்க என மீனவ பொண்ணு சுபிக்‌ஷா விஜே பார்வதிக்கு எதிராக குரலை உயர்த்திப் பேச பலரும் அவருக்கு ஃபயர் விட்டு வருகின்றனர்.

பாரு தான் கன்டென்ட்: இன்று வெளியான அனைத்து ப்ரோமோவிலும் பார்வதி தான் கன்டென்ட் என்றும் ஒரே ஆளாக ஒட்டுமொத்த டூப்ளெக்ஸ் வீட்டு ஆட்களையும் அவர் கதிகலங்க வைத்து வருகிறார் என அவரது ரசிகர்கள் விஜே பார்வதிக்கு ஃபயர் விட்டு வருகின்றனர். ப்ரோமோ இப்படிதான் இருக்கும், ஆனால், எபிசோடு மொக்கையாக இருக்கும் என காமன் ஆடியன்ஸ் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X