தர்பூசணி இந்நேரம் என்ன ஆச்சோ?.. ஓங்கி ஒரே மிதி விட்ட விஜே பாரு.. பிக் பாஸ் வீட்ல பிசிக்கல் வயலென்ஸ்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வெற்றிகரமாக 4வது நாளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கமல்ஹாசனுக்கு பதிலாக கடந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி இந்த சீசனையும் ஆரம்பித்து வைத்துள்ளார். சனிக்கிழமை விஜய் சேதுபதி வந்து பேசும் போது என்னவெல்லாம் காமெடி நடக்கும் என்பதை பார்க்கவே மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
அபிஷேக் ராஜா, ஜிபி முத்து, கூல் சுரேஷ் வரிசையில் இந்த சீசனில் வாட்டர் மெலான் திவாகரை பிக் பாஸ் வீட்டில் களமிறக்கியுள்ளனர். ஜிபி முத்து போல வந்த வேகத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு திவாகர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தான் ஷோவின் டைட்டில் வின்னரே ஆகிவிடுவார் போல தெரிகிறது.

அந்தளவுக்கு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் வாட்டர் மெலான் திவாகருக்கு ஆதரவு கிடைத்துள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் 4வது நாளின் முதல் ப்ரோமோவில் விஜே பார்வதி வாட்டர் மெலான் திவாகரை நெஞ்சிலேயே மிதிக்கும் காட்சி வெளியாகி ஷாக் ஆக்கியுள்ளது.
பிசிக்கல் வயலென்ஸ்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெர்பல் வயலென்ஸ் அதிகமாக இருக்கும். வாய் சண்டை வீரர்கள் வாள் வீச மாட்டார்கள் என்றே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை ட்ரோல் செய்வார்கள். ஆனால், இந்த சீசனில் ஆரம்பத்திலேயே வெட்டுவேன், குத்துவேன் என பேசி வரும் நிலையில், விளையாட்டாக ஓங்கி மிதித்து பிசிக்கல் வயலென்ஸ் என எல்லை மீறி செல்கிறது.
வயித்தை பார்த்தியா இல்லையா?: ஜோதிகா குஷி படத்தில் என் இடுப்பை பார்த்தியா இல்லையான்னு விஜய்யிடம் கேட்டு சண்டை போடுவது போல பிக் பாஸ் போட்டியாளரான கெமி என் கண்ணை பார்த்து பேசு, ஏன் என் வயித்தை பார்த்து பேசுற என வாட்டர் மெலான் திவாகருடன் நேற்று சண்டை போட்டார். கூடிய சீக்கிரமே பெண் போட்டியாளர்கள் திவாகரை காலி செய்ய உமன் கார்டை எடுப்பார்களோ என்கிற சந்தேகம் வருகிறது.
ஓங்கி மிதித்த பாரு: வாட்டர் மெலான் அகாடமி என பிக் பாஸ் நிகழ்ச்சியில் மார்னிங் ஆக்டிவிட்டி ஆரம்பம் ஆக நடிப்பு அசுரன் என தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் நம்ம தர்பூசணி திவாகருடன் மற்ற போட்டியாளர்கள் நடிப்பதாக வரம்பு மீறி செய்து வரும் செயல் பார்வையாளர்களை கடுப்பாக்கி வருகிறது. அதிலும், ஆரம்பத்தில் இருந்தே விஜே பார்வதி அடுத்த பிரியங்கா தேஷ்பாண்டே போல நடந்துக் கொள்கிறார் என்றும் வனிதா அக்காவின் தங்கச்சி இவங்க என்றும் ட்ரோல் செய்து வரும் நிலையில், வாட்டர்மெலான் திவாகரை நெஞ்சிலேயே நடிப்பதாக சொல்லி ஓங்கி ஒரே மிதி மிதிக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
சீக்கிரம் அடிச்சிப்பாங்க: கமல் சார் இருந்தால் கன்ட்ரோல் பண்ணுவார் என்றும் விஜய் சேதுபதி போன சீசனிலேயே போட்டியாளர்களை ஃப்ரீயாக விட்ட நிலையில், இந்த சீசனில் கூடிய சீக்கிரமே ஒருவரை ஒருவர் நிஜமாகவே அடித்துக் கொள்ளும் நிலை உருவாகும் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











