Bigg Boss: அப்படி இரு.. இப்படி இருனு சொல்ல நீ யாரு.. நாலு பேரையும் நடுவீட்டில் வைத்து கிழித்த பாரு!

சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் சனிக்கிழமை விஜய் சேதுபதி ஒவ்வொருவரையும் தனித்தனியாகவே கிழி கிழி என கிழித்து விட்டார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை குறைந்த வாக்குகளை பெற்றவரை வெளியில் அனுப்பும் விஜய் சேதுபதி, சனிக்கிழமையே கலையரசனை வெளியேற்றி விட்டார். இதையடுத்து, நேற்று அமித் பார்கவ், திவ்யா கணேஷ், பிரஜன், சாண்ட்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக வீட்டிற்குள் வந்தனர்.

நான்கு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, வெளியில் என்னென்ன நடக்கிறது என்பதை உள்ள இருப்பவர்களிடம் முகத்திற்கு நேராக கூறினார்கள். கணவன் மனைவியான பிரஜன் மற்றும் சாண்ட்ரா இருவரும், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து, நீங்க எதற்காக இந்த வீட்டுக்கு வந்தீங்க என எழுத சொல்லி, அதை அவர்களையே படிக்க சொன்னார்கள். அப்போது, பார்வதி நான் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த வீட்டிற்கு வந்தேன், மக்களும் என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதி இருந்தார். அதை பாரு படித்தவுடன், அந்த பேப்பரை கிழித்த சாண்ட்ரா, நீங்க வந்த வேலயை விட்டு விட்டு,வேறு வேலை செய்கிறீர்கள் என்றார்.

Bigg Boss tamil 9 VJ Parvathy 9
Photo Credit:

எதுக்கு வந்தீங்க: அதையடுத்து, வந்த திவ்யா கணேசன், பாரு நீங்க ஒரு விஜே, பிரபலமான ஆளு, உங்களுக்கு யாருகிட்ட எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி கேள்வியை கேட்டால் சரியாக இருக்கும் என உங்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும், நீங்கள் இங்கு சண்டை போட்டு பிரபலமாகலாம் என நினைக்கிறீர்கள். அது வெளியில் மிகவும் தப்பாக தெரிகிறது என முகத்திற்கு நேராகவே கூறிவிட்டார். இதனால் கடுப்பான பார்வதி எதுவுமே சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார். அதன்பின், பார்வதிக்கும் கம்ருதீனுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் சண்டை போட்டுக் கொண்டனர்.

கிழித்த பாரு: இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், பேசும் பார்வதி, குறிப்பாக பிரஜன் மற்றும் சாண்ராவிற்கு சொல்கிறேன். இப்படி செய்யக்கூடாது, அப்படி செய்யக்கூடாது என்றார்கள். ஆனால், பிரஜன் வீட்டுக்குள் வந்ததுமே கொசு அடித்து போல என்னை 'மாப்' செய்கிறார். அதேபோல திவ்யா, அமித் பார்கவ் நீங்கள் பண்ணதை எல்லாம் நாங்கள் பார்த்து விட்டோம், பார்க்கும்படி எதுவுமே இல்லை என்று சொன்னார்கள். இதை சொல்வதற்கு நீங்கள் யார்? எனக்கு தெரியும் இங்கு நான் என்ன செய்ய வேண்டும், என்ன பண்ண கூடாது என்று. இந்த சொசைட்டியில் நான்கு பேர் நான்கு விதமாக பேசுவார்கள் என்று சொல்வார்களே, அந்த நாலு பேரும் நீங்க தான் என்று நான்கு பேரையும் நடுவீட்டில் உட்கார வைத்து பாரு கிழிகிழி என கிழித்திருக்கிறார்.

இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும், பாரு திவாகர் கிட்ட கம்ருதீன் பத்தி சொன்னது வெளியே தெரிந்திடுச்சு. அதனால தான் பாரு நான்கு பேரை டார்கெட் பண்றாங்க என்றும், யாரோ நாலு பேர அடிச்சு நான் டான் ஆகலடா, நான் அடிச்ச நாலு பேருமே டான் தான்டா என்று கேஜிஎஃப் படத்தில் வரும் வசனத்தை போட்டு ட்ரொல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X