சுசித்ராவின் வாட்ஸ் அப் சாட்டை அம்பலப்படுத்திய விஜே வைஷு.. நாஞ்சில் உடன் திடீர் சமரசம்.. என்ன ஆச்சு?

சென்னை: நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்தார் என்றும் பல வருடங்கள் லிவிங் டுகெதர் வாழ்க்கை எல்லாம் நடத்தினார். ஆனால், இப்போ என்னை விட்டு விலகிவிட்டார் என நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் ஆகி பல மாதங்கள் கழித்து விஜே வைஷு எனும் திருநங்கை புகார் அளித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.

சினிமா பிரபலங்களை விட சீரியல் பிரபலங்கள் மத்தியில் ஏகப்பட்ட கள்ள உறவு கதைகள் மோசமாக போய்க்கொண்டு இருக்கிறதே என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து தள்ளினர்.

Vj Vaishu reveals Suchitra WhatsApp chat involves Nanjil VIjayan and Joy Crizilda issues
Photo Credit:

நாஞ்சில் விஜயன் மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு வைஷு எனக்கு தங்கை மாதிரி அவர் நல்ல திறமையான பொண்ணு என்னிடம் நேரடியாகவே வந்து பேசியிருக்கலாமே என்று சொன்ன நிலையில், அதற்கு எதிராக பேட்டியளித்த வைஷு திடீரென சமரசம் செய்துக் கொண்டு புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.

நாஞ்சில் விஜயன் - வைஷு விவகாரம்: விஜய் டிவியில் விஜே சித்ரா தற்கொலை சம்பவத்தில் இருந்து ஏகப்பட்ட சர்ச்சைகள் சின்னத்திரை பிரபலங்கள் மத்தியிலும் எழுந்து வருகின்றன. அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர், விவாகரத்து, பண மோசடி என பல விவகாரங்களில் சின்னத்திரை பிரபலங்களும் சிக்கி வரும் சூழலில் நாஞ்சில் விஜயன் தன்னுடன் உறவு கொண்டிருந்தார் என்றும் தன்னிடம் வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டார் என விஜே வைஷு கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாபஸ் வாங்கிய விஜே வைஷு: நாஞ்சில் விஜயன் மற்றும் அவரது மனைவி விஜே வைஷுவை எதிர்த்து பதிலடி கொடுக்காமல் உன்னை என் தங்கச்சி மாதிரி தானேம்மா நினைச்சேன். அவ ஒரு திறமையான பொண்ணு என்றும் நாங்கள் வாழ்வது பிடிக்கவில்லையா என நாஞ்சில் விஜயன் மற்றும் அவரது மனைவி பேசிய நிலையில், பிரச்சனை பெரிதாக்காமல் விஜே வைஷு தான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டார். அவருக்கு ஏதாவது அழுத்தம் தரப்பட்டதா? அல்லது பணத்தை கொடுத்து விட்டாரா? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.

சுசித்ரா வாட்ஸ் அப் சாட்: இதற்கு இடையே பாடகி சுசித்ரா பேட்டி கொடுக்கப் போகிறேன் என்றும் ஜாய் கிரிஸில்டா மற்றும் உன்னோட விஷயத்தை பற்றி பேசப்போகிறேன். ஆனால், உனக்கு சாதகமாக பேச முடியாது என வாட்ஸ் அப் சாட் செய்த ஸ்க்ரீன் ஷாட்டை போட்டு மெண்டல், லூசு, பப்ளிசிட்டி என ஹாஷ்டேக் போட்டு சுசித்ராவின் டபுள் கேமை அம்பலப்படுத்தியுள்ளார் என நெட்டிசன்கள் எதுக்கு இந்த அம்மாவுக்கு இந்த தேவையில்லாத வேலை என திட்டி வருகின்றனர்.

விஜய் ரசிகர்களிடம் திட்டு வாங்கும் சுசித்ரா: மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரத்திலும் விஜய்யை இழுத்து ஜாய் கிரிஸில்டாவுடன் தொடர்பு படுத்தி பேசிய சுசித்ராவை விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். பிரபலங்களுக்கு பிஆர் வேலை பார்க்கிறாரா சுசித்ரா? என்றும் ஏகப்பட்ட ட்ரோல்கள் கிளம்பி உள்ளன. தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், தனுஷ் என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் ரசிகர்கள் சுசித்ராவை அவரது பேச்சுக்காக திட்டி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜே வைஷு சுசித்ராவின் வாட்ஸ் அப் சாட்டையும் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X