»   »  வெயிட்டை குறைக்காவிட்டால் தூக்கிடுவோம்: நடிகையிடம் கூறினாரா தயாரிப்பாளர்?

வெயிட்டை குறைக்காவிட்டால் தூக்கிடுவோம்: நடிகையிடம் கூறினாரா தயாரிப்பாளர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து வரும் நேஹா பென்ட்சேவை உடல் எடையை குறைக்காவிட்டால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுமாறு கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மே ஐ கம் இன் மேடம் என்ற இந்தி காமெடி நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் அழகான பாஸாக நடித்து வருபவர் நேஹா பென்ட்சே.


ஒல்லியாக இருந்த நேஹா தற்போது வெயிட் போட்டுவிட்டார்.


வெயிட்

வெயிட்

நேஹாவுக்கு ஹார்மோன் பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு வெயிட் போட்டுவிட்டது. இந்நிலையில் உடல் எடையை குறைக்காவிட்டால் நிகழ்ச்சியில் இருந்து நீக்கிவிடுவோம் என்று தயாரிப்பாளர் அவரிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.


நேஹா

நேஹா

வெயிட்டை குறைக்காவிட்டால் என்னை நிகழ்ச்சியில் இருந்து நீக்கப் போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. இதை யார் கிளப்பிவிட்டார்களே என தெரியவில்லை என்கிறார் நேஹா.


பிரச்சனை

பிரச்சனை

என் உடலில் ஹார்மோன் பிரச்சனையாகிவிட்டது. அதனால் என் உடல் எடை அதிகரித்துவிட்டது. ஹார்மோன் பிரச்சனையை எளிதில் சரி செய்ய முடியாது என்று நேஹா தெரிவித்துள்ளார்.


 புகைப்படம்

புகைப்படம்

சில செய்தியாளர்கள் நேஹாவிடம் பேட்டி எடுக்க சென்றுள்ளனர். ஆனால் வெயிட் போட்டதால் அவர் செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டாராம். மே ஐ கம் இன் மேடம் ஷோ நடிகர்களின் ஒப்பந்தம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேஹாவின் ஒப்பந்தம் ஆறு மாதமே நீட்டிக்கப்பட்டுள்ளது.


English summary
TV show actress Neha Pendse is going through medical complications and has gained weight. Recently, there were reports that the actress was asked to lose weight or to leave the show!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil