For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அய்யயோ...டங்க் ஸ்லிப் ஆகிடுச்சே...மறுபடியும் வசமா சிக்கிட்டிங்களே கோபி? கட்டம் சரியல்லையோ?

  |

  சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல் தான் தற்போது அடுத்தடுத்த ட்விஸ்டுகளுடன் செம விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் ஆவலாக பார்த்து வருகிறார்கள்.

  கோபி - ராதிகா உறவு பற்றிய உண்மை பாக்யாவிற்கு ஒரு வழியாக தெரிந்து விட்டது. வீட்டில் உள்ள அனைவரின் முன்னிலையிலும் உண்மையை போட்டு உடைக்கும் பாக்யா, கோபியை நிக்க வைத்து கேள்வி கேட்கிறார். பாக்யா சொல்லும் ஒவ்வொரு விஷயமும் வீட்டில் உள்ளவர்களுக்கு பயங்கர ஷாக்காக உள்ளது.

  கோபி பற்றிய உண்மை அனைத்தையும் சொல்லி விட்டு, வீட்டை விட்டு வெளியேறும் பாக்யா, தனது கேட்டரிங் ஆபீசில் போய் தங்குகிறார். எழில் மற்றும் செல்வியும் பாக்யாவிற்கு துணையாக அங்கேயே தங்குகிறார். வீட்டில் உள்ளவர்கள் கோபியிடம் கோபமாகவும், சென்டிமென்டாகவும் பேசுகிறார்கள். கோபி குற்ற உணர்ச்சியில் தவிப்பதாக காட்டப்படுகிறது.

  விஜய் ஆண்டனி பர்த்டேக்கு சூப்பர் ட்ரீட்: மிரட்டலா வெளியான ரத்தம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்விஜய் ஆண்டனி பர்த்டேக்கு சூப்பர் ட்ரீட்: மிரட்டலா வெளியான ரத்தம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

  ராதிகா வீட்டிற்கு செல்லும் பாக்யா

  ராதிகா வீட்டிற்கு செல்லும் பாக்யா

  இதற்கிடையில் மும்பை செல்ல புறப்படும் ராதிகா, மயுவிற்கு உடல்நிலை சரியில்லாததால் பயணத்தை தள்ளி வைக்கிறார். அந்த சமயத்தில் ராதிகா வீட்டிற்கு வரும் பாக்யா, ஏன் என்ன ஏமாத்துனீங்க என கேட்டு, லெஃப் அன்ட் ரைட் வாங்குகிறார். தனக்கு சமீபத்தில் தான் உண்மை எல்லாம் தெரியும் என பாக்யாவிடம் விளக்க முயற்சி செய்கிறார் ராதிகா. இதோடு கடந்த வார எபிசோட் நிறைவடைகிறது.

  அடுத்த ட்விஸ்ட் தரமா இருக்கே

  அடுத்த ட்விஸ்ட் தரமா இருக்கே

  ஒரே சென்டிமென்ட், அழுகை சீனாக இருப்பதால் ரசிகர்கள் போரடிப்பதாக உணர்வார்கள் என நினைத்தாரோ என்னவோ, டைரக்டர் வரும் வாரத்தில் தரமான சம்பவத்திற்காக அடுத்த ட்விட்டை வைத்து விட்டார். பாக்யலட்சுமி சீரியலில் வரும் வாரத்தில் என்ன நடக்க போகிறது என்பது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

  அடுத்து கோபி போடும் பிளான்

  அடுத்து கோபி போடும் பிளான்

  அதில், ராதிகா சம்மதிக்கும் வரை காத்திருக்க வேண்டும். ராதிகா திருமணத்திற்கு ஓகே சொன்னதும், பாக்யாவிற்கு டைவர்ஸ் கொடுத்து விட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொள்ளலலாம். அதுவரை வீட்டில் உள்ளவர்களை சமாளிக்க ஏதாவது ஒன்றை சொல்லி பாக்யாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என பிளான் போடுகிறார் கோபி. தனது பிளானை நிறைவேற்ற பாக்யாவை பார்ப்பதற்காக அவர் தங்கி இருக்கும் கேட்டரிங் ஆபீசிற்கு செல்கிறார் கோபி.

  ஆஹா...டங்க் ஸ்லிப் ஆகிடுச்சே

  ஆஹா...டங்க் ஸ்லிப் ஆகிடுச்சே

  கோபியை பார்த்ததும் ஷாக்காகிறார் பாக்யா. நான் செய்ததை தவறு இல்லை என சொல்லவில்லை. குழந்தை கஷ்டப்படுகிறாள். அவளுக்காக வீட்டிற்கு வா என பாக்யாவிடம் நல்லவர் போல் சென்டிமென்டாக பேசுகிறார் கோபி. உஷாராகி விட்ட பாக்யா, இனியும் இப்படி ஒரு தவறு நடக்காது என உத்திரவாதம் கொடுங்க, வருகிறேன் என சத்தியம் கேட்கிறார். பாக்யாவின் கையில் அடித்து சத்தியம் செய்ய போகும் கோபி, டங்க் ஸ்லிப் ஆகி,நீ தான் என்னோட வாழ்க்கை ராதிகா என உளறி விடுகிறார். இதை கேட்டு ஷாக்காகும் பாக்யா, சத்தியம் செய்ய வரும் கோபியின் கையை தடுத்து நிறுத்துகிறார். அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார் கோபி.

  கோபிக்கு கட்டம் சரியில்லையோ

  கோபிக்கு கட்டம் சரியில்லையோ

  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், கோபி...நீ எல்லாம் திருந்தவே மாட்டியா? டங்க் ஸ்லிப்பாகி இப்படி மாட்டிக்கிட்டிங்களே பங்கு. எல்லா பிளானும் இப்படி வீணாப் போச்சே. கோபிக்கு கட்டம் சரியில்லையோ. இனி அடுத்து என்ன ஆக போகுதோ...பாக்யாவின் ஆட்டம் இனி தான் ஆரம்பம் போல என கெமண்ட் செய்து வருகின்றனர்.

  English summary
  Bhagyalakshmi serial had new twist in upcoming week. Gopi planned to convince Bhagya temperarly for adjust family members. But Bhagya ask promise from Gopi which the mistake never happen. Gopi's bad time, his tongue sliped and instead of Bhagya's name, he said that your are my life Radhika.Bhagya shocked and angered with Gopi.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X