மாற்றப்பட போவது பிக்பாஸ் நேரமா? சீரியல்கள் நேரமா?... குழப்பத்தில் ரசிகர்கள்

சென்னை : அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கப்பட உள்ளதாக விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கவுன்டவுன் ஸ்டைலில் தினம் ஒரு ப்ரோமோவையும் வெளியிட்டு விறுவிறுப்பை கூட்டி, அசத்தி வருகிறது விஜய் டிவி.

இதனால் போட்டியாளர்கள் பற்றிய பட்டியலும் விதவிதமாக வெளியாகி வருகிறது. பிக்பாஸ் பற்றிய பேச்சு தான் சோஷியல் மீடியாவிலும் டிரெண்டிங் ஆகி வருகிறது. போட்டியாளர்கள் என கூறப்பட்ட சிலர் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். போட்டியாளர்கள் ஸ்டார் ஓட்டலில் தனிமையில் இருப்பதாக கூறினார்கள் ஆனால் போட்டியாளர்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்பட்ட பிரியங்கா தேஷ்பாண்டே, கனி, பவானி ரெட்டி, மிலா என பலரும் இன்ஸ்டாகிராமில் இன்று வரை போஸ்ட் போட்டு வருகிறார்கள்.

5 மணி நேர நிகழ்ச்சி

5 மணி நேர நிகழ்ச்சி

ஜுன் மாதமே துவங்குவதாக இருந்த பிக்பாஸ் சீசன் 5, கொரோனா இரண்டாம் அலை காரணமாக அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி, இரவு 11 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் வ்ரிச்சுவல் முறையில் தான் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனராம்.

சீரியல் நேரம் மாறுமா

சீரியல் நேரம் மாறுமா

பிக்பாஸ் துவங்கப்பட உள்ளதால் விஜய் சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்பட உள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது. ஆனால் இதுவரை அது பற்றிய எந்த அறிவிப்பும் முறையாக வெளியிடப்படவில்லை. இதனால் ரசிகர்களும் சீரியல்கள் மாற்றப்படுமா, மாற்றப்படாதா என்ற குழப்பத்திலேயே இருந்து வருகிறார்கள்.

டிஆர்பி.,யை பாதிக்குமே

டிஆர்பி.,யை பாதிக்குமே

விஜய் டிவி.,யில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களின் மனம் கவர்ந்தவையாக உள்ளன. டிஆர்பி.,யிலும் விஜய் டிவி சீரியல்கள் தான் முன்னணியில் உள்ளன. இதனால் சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரத்தை மாற்றினால், அது டிஆர்பி.,யை வெகுவாக பாதிக்கும் என விஜய் டிவி நினைக்கிறது. அதிகப்படியான ரசிகர்களையும் இழக்க வேண்டி இருக்கும் என விஜய் டிவி கருதுகிறது.

பிக்பாஸ் நேரம் மாறுகிறதா

பிக்பாஸ் நேரம் மாறுகிறதா

இந்நிலையில் சீரியல்கள் அனைத்தும் விறுவிறுப்பாக போய் கொண்டிருப்பதால் சீரியல்கள் நேரத்திற்கு பதிலாக, பிக்பாஸ் ஒளிபரப்பாகும் நேரத்தை மாற்ற முடிவு செய்திருக்கிறார்களாம். பிக்பாஸ் முந்தைய சீசன்கள் அனைத்தும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகும். வார இறுதியில் கமல் வரும் எபிசோட்கள் மட்டும் 9.30 முதல் 11 மணிவரை ஒளிபரப்பாகும்.

இது தான் புதிய நேரமா

இது தான் புதிய நேரமா

ஆனால் பிக்பாஸ் சீசன் 5, இரவு 10 மணிக்கு துவங்கி 11 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம். இதனால் சீரியல்களுக்கு பாதிப்பு இருக்காது என கூறப்படுகிறது. 9.30 மணிக்கு ராஜா ராணி 2 சீரியல் ஒளிபரப்பாகும். இதைத் தொடர்ந்து 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாம். இதனால் அந்த சீரியல் நேரத்தை பிக்பாஸிற்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

கவலையில் ரசிகர்கள்

கவலையில் ரசிகர்கள்

அதே சமயம் மிக தாமதமாக பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்டால் அதிக ரசிகர்களின் எண்ணிக்கையை பாதிக்கும் என சிலர் கருதுகிறார்கள். முந்தைய சீசன்களை தூங்க செல்வதற்கு முன் பார்க்க வசதியாக இருந்ததாகவும், தற்போது நேரத்தை மாற்றினால் பலர் பிக்பாஸ் பார்ப்பதை நிறுத்த வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் பலர் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X