பாக்யலட்சுமியில் அடுத்து நடக்க போகும் தரமான சம்பவம்...இதை முன்னாடியே எதிர்பார்த்தோம்

சென்னை : விஜய் டிவியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பானாலும் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் சீரியலாக மாறி உள்ளது பாக்யலட்சுமி. இடையில் கொஞ்சம் டல் அடித்த இந்த சீரியல் கடந்த சில வாரங்களாகவே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, பல ட்விஸ்ட்களுடன் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நாளுக்கு நாள் இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

ட்விஸ்ட் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த சீரியல் விரைவில் முடிய போகிறதா என்ற கேள்விகளையும் ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஆனால் இனி தான் கதையே ஆரம்ப மாகிறது என்பது போல் கதை சென்று கொண்டிருக்கிறது.

உண்மையை உடைத்த பாக்யா

உண்மையை உடைத்த பாக்யா

கோபி - ராதிகாவின் உறவு பற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்ளும் பாக்யா, வீட்டில் உள்ள அனைவரின் முன்னிலையிலும் வைத்து, கோபியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். மொத்த உண்மையையும் போட்டு உடைத்து விட்டு, வீட்டை விட்டும் வெளியேறி சென்று விடுகிறார். அவர் பின்னாலேயே எழில் மற்றும் செல்வி ஆகியோர் செல்கிறார்கள்.இதனால் பாக்யா எங்கே போகிறார், அடுத்து என்ன நடக்கும், கோபி - ராதிகா திருமணம் நடக்குமா என ஆர்வமாக கேட்க துவங்கி விட்டனர்.

பாக்யா எங்கே போகிறார்

பாக்யா எங்கே போகிறார்

வீட்டை விட்டு வெளியேறிய பாக்யா, நேரடியாக தான் கேட்டரிங் நடத்தும் ஆபிசிற்கு புறப்பட்டு செல்கிறார். வீட்டில் அனைவரும் அழுது தவிக்கிறார்கள். இதற்கிடையில் ராதிகா வீட்டில் மறுபடியும் அவர் மும்பை செல்லும் பேச்சை துவக்க, அவரது அம்மாவும் அண்ணனும் முடிவை மாற்ற அட்வைஸ் செய்கிறார்கள். இதனால் ராதிகா குழப்பமடைகிறார். இதோடு இந்த வார எபிசோட் முடிகிறது.

அடுத்த வாரம் என்ன நடக்கும்

அடுத்த வாரம் என்ன நடக்கும்

இனி வரும் வாரத்தில், கோபியிடம் தனித்தனியாக சென்று செழியன், இனியா ஆகியோர் பேசுகிறார்கள். அழுது, புலம்புகிறார்கள். இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறார் கோபி. இதற்கிடையில் பாக்யா, செல்வியை அழைத்துக் கொண்டு நேராக ராதிகாவின் வீட்டிற்கு செல்வது போல் ப்ரொமோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் இந்த சீன் எப்போ வரப் போகுது என ரசிகர்கள் ஆர்வம் அதிகரிக்க கேட்டு வருகின்றனர்.

இந்த சீன் எப்போ நடக்க போகுது

இந்த சீன் எப்போ நடக்க போகுது

வீட்டிற்கு வரும் பாக்யா பார்த்ததும், அவருக்கு எதுவும் தெரியாது என நினைத்து வழக்கம் போல் வாங்க என வரவேற்கிறார் ராதிகா. வீட்டிற்குள் செல்லும் பாக்யா, நீங்களும் என்னை இப்படி ஏமாத்திட்டிங்களே ராதிகா என கேள்வி கேட்கிறார். பாக்யாவின் இந்த கேள்வியால் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இதை பார்த்த ரசிகர்கள், பாக்யா, ராதிகாவிடம் என்ன கேட்க போகிறார், அதற்கு ராதிகாவின் ரியாக்ஷன் என்ன என்பதை பார்க்க ஆசையாக காத்திருக்கிறார்கள்.

இதை முன்னாடியே எதிர்பார்த்தோம்

இதை முன்னாடியே எதிர்பார்த்தோம்

இருந்தாலும் சிலர் , இந்த சீனை நாங்க முன்னாடியே எதிர்பார்த்தோம். வீட்டை வெளியேறும் பாக்யா, நேராக ராதிகா வீட்டிற்கு தான் செல்வார். அங்கு போய் பக்கம் பக்கமாக கேள்வி கேட்பார். ராதிகாவை திணற வைப்பார் என்று தான் தாங்கள் எதிர்பார்த்ததாக ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X