twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மன்மத ராசா சாயா சிங் நடிக்கும் புது தொடர்.. என்ன ரோல் தெரியுமா? ரசிகர்கள் ஆர்வம்!

    |

    சென்னை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 21 திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    பல பிரபல நடிகர்களோடு இணைந்து நடிகை சாயா சிங், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த புதிய நெடுந்தொடரை ரசிகர்கள் ஆர்வமாக காண காத்துகொண்டு இருக்கின்றனர்.

    தீவிரமான உணர்வுகள் மற்றும் அதிரடி திருப்பங்கள் கொண்ட கதையின் வழியாக உடன் பிறந்த சகோதரிகளின் பாசப்பிணைப்பை இப்புதுயுகத்தில் புதிய பரிமாணத்தில் கொடுக்கவுள்ளது இந்த நெடுந்தொடர்.

    அரபிக்குத்து பாடல் சர்ச்சை.. இதெல்லாம் ஒரு குத்தமா?... பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள் ! அரபிக்குத்து பாடல் சர்ச்சை.. இதெல்லாம் ஒரு குத்தமா?... பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள் !

    மன்மத ராணி சாயா சிங்

    மன்மத ராணி சாயா சிங்

    மதுரை மாநகரைப் பின்புலமாக கொண்டிருக்கும் கதையான 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' ஒவ்வொருவரும் தனித்துவமான பண்பியல்புகளை கொண்டிருக்கும் நான்கு சகோதரிகளின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. பெற்றோர்களை இளவயதிலேயே பறிகொடுத்த பிறகு குடும்ப பொறுப்புகள் தலை மீது விழுகிற இந்திராணி என்ற இளம்பெண்ணின் வாழ்க்கையை (நடிகை சாயா சிங் நடிப்பில்) சுற்றி பின்னப்பட்டிருக்கும் இக்கதையில் அன்பு, பாசம் மற்றும் அதிரடி திருப்பங்கள், எதிர்பாரா நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெற்று விறுவிறுப்பாக இருக்கவுள்ளது.

    போராட்டமான வாழ்க்கை

    போராட்டமான வாழ்க்கை

    தனது பெற்றோர்களின் மரணத்திற்கு காரணமானவர்களை எதிர்த்து போராடி வாழ்வில் ஜெயிக்கவும் தனது சகோதரிகளை பாதுகாப்பாக பேணி வளர்க்கவும் உறுதிமொழி ஏற்கும் இந்திராணி, ஒரு அப்பாவி என்ற இளம் பெண் நிலையிலிருந்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய மன உறுதிவாய்ந்த பெண்ணாக புதிய அவதாரம் எடுக்கிறார், மேகலா (நடிகை சுனிதா), புவனா (சங்கவி) மற்றும் காவியா (ஐரா அகர்வால்) என்ற மூன்று இளைய சகோதரிகளின் வாழ்க்கை பயணத்தையும் மனதை தொடும் விதத்தில் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

    சூழ்ச்சிக்கார்கள்

    சூழ்ச்சிக்கார்கள்

    பிரபல சின்னத்திரை நடிகர் தீபக் குமார், காவியாவுக்கு (ஐரா அகர்வால்) எதிரான முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    சகோதரிகளுக்கிடையே ஏற்படும் குடும்ப அளவிலான போட்டியின் நுட்பங்களையும் இந்நெடுந்தொடர் கூறுகிறது. கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் அவர்களது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கிற ராஜமாணிக்கம் (நடிகர் பார்த்தன் நடிப்பில்) என்ற இச்சகோதரிகளின் மாமாவின் சூழ்ச்சிகளையும், நடவடிக்கைகளையும் காட்டும் தொடராக உருவாக்கப்பட்டுள்ளது.

    மனஉறுதியான கதாபாத்திரம்

    மனஉறுதியான கதாபாத்திரம்

    இது குறித்து, நடிகை சாயா சிங் கூறுகையில், "குடும்பத்தில் வழக்கமாக ஆண்கள் தான் குடும்பத் தலைவர்களாக இருக்கின்றனர். நம்ம மதுரை சிஸ்டர்ஸ் கதையில் எனது கதாபாத்திரம், குடும்பங்களை ஒருங்கிணைப்பதிலும் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டுவதிலும் ஆண்களுக்கு நிகரான திறன் கொண்டவர்களாகவே பெண்கள் இருக்கின்றனர் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்ல முற்படுகிறது. பெண்களின் வேறுபட்ட பரிமாணத்தை இது நேர்த்தியாக எனது பிற கதாபாத்திரங்களிலிருந்து நம்ம மதுரை சிஸ்டர்ஸ்-ல் எனது கதாபாத்திரம் மிகவும் வேறுபட்டு தனித்துவமானதாக திகழ்கிறது," என்று கூறினார். இந்த தொடர், பிப்ரவரி 21 திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    English summary
    Whats the Role of Manmatha Rasa Saya Singh New Serial ? Fans Excited
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X