»   »  பிக்பாஸ் வீட்டில் யார் ஜெயிப்பார்? - வெளியேறிய சுஜாவின் கடிதம்!

பிக்பாஸ் வீட்டில் யார் ஜெயிப்பார்? - வெளியேறிய சுஜாவின் கடிதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக் பாஸ் சுஜா வருணி உருக்கமான கடிதம்-வீடியோ

சென்னை : தமிழில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் போட்டியாளராக உள்ளே வந்தவர் நடிகை சுஜா வருணி.

நூறாவது நாள் நெருங்கும் சமயத்தில் இவர் குறைவான ஓட்டுகள் பெற்றதோடு, சினேகனின் மதிப்பெண்கள் கிடைக்காததால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகியுள்ள சுஜா வருணி தனது பேஸ்புக் பக்கத்தில் தற்போது கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நன்றி :

நன்றி :

'மக்கள் பிரதிநிதி கமல்ஹாசனுக்கும், பிக் பாஸ் குழுவுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். என்னைப் பற்றி வந்த கிண்டல், மீம்கள் செய்தது எனக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது. அன்பு காட்டியவர்களுக்கு நன்றி. அதை நான் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள்.

நான் சுயநலவாதியா :

சிலர் என்னை கடும் உழைப்பாளி எனவும், சிலர் சுயநலவாதி என்றும் கூறினர். இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி தான். அதில், சுயநலத்துடன் இருப்பதில் என்ன தவறு. கணேஷ், ஹரீஷைத் தவிர எல்லோருமே நடிக்கிறார்கள். நான் நானாகவே எப்போதுமே இருந்திருக்கிறேன்.

கமல் கொடுத்த ஊக்கம் :

கமல் கொடுத்த ஊக்கம் :

கமல் சார் எனக்கு ஊக்கம் கொடுத்துப் பேசும்போதே நான் வெற்றி பெற்றுவிட்டேன். அது எனக்கு சிறப்பான தருணம். மீண்டும் இறுதி நிகழ்ச்சியில் உங்களைச் சந்திக்க வருவதில் மகிழ்ச்சி.

உண்மை ஜெயிக்கும் :

உண்மை ஜெயிக்கும் :

எனக்கு ஓட்டு போட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை ஜெயிக்கும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. ஓட்டுப் போடும்போது கவனமாக இருங்கள்' எனக் கூறியுள்ளார்.

English summary
Suja Varunee came in as a rival with Wild Card Entry at the Biggboss show. Suja, an eleminitate, has posted a letter on her Facebook page. Suja said, "Be careful while voting in Biggboss."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil