Just In
- 8 min ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 21 min ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 41 min ago
தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன அம்மா.. அப்பாதான் ஆலோசகர்.. சிம்பு செம ஹேப்பி அண்ணாச்சி!
- 1 hr ago
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
Don't Miss!
- Lifestyle
பொய் பேசுறது இந்த 6 ராசிகாரங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரியாம்... ரொம்ப உஷாரா இருங்க இவங்ககிட்ட...!
- Sports
இப்படி ஒரு விக்கெட்கீப்பர் தான் தேவை.. அப்புறம் உங்க இஷ்டம்.. பண்ட்டுக்கு எதிராக களமிறங்கிய சாஹா!
- News
துரைமுருகனுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா?... கட்சி தலைமை யார் பக்கம்?
- Finance
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த டிசிஎஸ்.. உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக உருவெடுத்த டிசிஎஸ்..!
- Education
டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலூர் சிஎம்சி-யில் வேலை வாய்ப்பு!
- Automobiles
7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? வெளியான புதிய தகவலால் எகிறிய எதிர்பார்ப்பு
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Lakshmi Stores Serial: பாக்கியலட்சுமி மகாலட்சுமியை இப்படியா ஏமாத்துவா?
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் கதை ரொம்ப ஆபத்தான காட்சிகளில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. பொறுமை இழந்து சிறியவர்கள், பெரியவர்கள் பேச்சை கேட்காமல் ஏதாவது செயல்களில் ஈடுபடும் போது ஏற்படும் விபரீதங்களை சமாளிப்பது என்பது பெரும் கஷ்டம்.
இந்த கஷ்டத்தில்தான் இப்போது லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் பயணித்துக் கொண்டு இருக்கிறது. ரவியும், பாக்ய லட்சுமியும் ரிஜிஸ்டர் ஆஃபீசில் பதிவுத் திருமணம் செய்து கொள்ள சென்றதை அறிந்து கொண்ட மகாலட்சுமிக்கு, அவரின் கணவர் தேவராஜை பாக்கியலட்சுமி கன்னத்தில் அடித்த விஷயம் தெரியாது.
அதனால், ரவி பாக்கிய லட்சுமியின் நினைவில் உருகுவதைப் பார்த்த அண்ணி மகாலட்சுமி, பாக்கிய லட்சுமி வீட்டுக்கு போய் சமாதானம் பேசலாம் என்று போகிறார்கள்.தனது நாத்தனார் கமலாவுடன்.
Roja serial:வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைச்சு போட்டானே....!

தேவராஜ் பாக்கியலட்சுமி
பாக்கிய லட்சுமி தேவராஜிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்க முகம், உடலை மறைக்கும் ஃபர்தா அணிந்துகொண்டு அவரின் வீட்டுக்கே போகிறாள். அங்கு இருந்த மகாலட்சுமி, பாக்கியலட்சுமி வீட்டுக்கு கிளம்ப, பாக்கிய லட்சுமி இவங்க வீட்டில் தேவராஜிடம் மன்னிப்பு கேட்க நிற்கிறாள்.அதே மாதிரி தேவராஜ் வந்ததும் மன்னிப்பு கேட்க, கோபமான தேவராஜ் உமாவை விட்டு, அவளை வெளியே தள்ளிவிட சொல்கிறார். மன்னிப்பு கேட்க இதுவும் போச்சா... வெளியில் வந்து விழுந்த பாக்கியலட்சுமி ரவியின் நெஞ்சில் விழுகிறாள்.ரவி அவளை விலக்கிவிட்டு உள்ளே சென்று விடுகிறான்.

வெகு நேரம் காத்திருப்பு
பாக்கிய லட்சுமி வீட்டில் மகாலட்சுமி கமலாவுடன் வெகு நேரம் காத்திருந்தும் ,பாக்கிய லட்சுமி மிக லேட்டாக வீட்டுக்கு வர, அதுவரை தாத்தாவும், அவளின் அண்ணியும் கூட வீட்டுக்கு வரவில்லை.பிறகு ஒரு வழியாகபாக்கியலட்சுமி வீட்டுக்கு வந்தபோது, மகாக்கா வீட்டுக்கு வந்திருக்காங்கன்னு தங்கச்சி வனிதா சொல்றா. ஓடிப் போய் மகாக்காவைப் பார்க்கிறாள் பாக்கியலட்சுமி.

தப்பு செய்யலையே
அக்கா என்னை மன்னிச்சுருங்க அக்கான்னு பாக்கியலட்சுமி மகாவை பார்த்து அழ,மன்னிப்பு கேட்கற மாதிரி தப்பா நீ செய்திருக்கேன்னு சொல்லி திரும்பிக்கறாங்க. அக்கா நீங்க மன்னிக்கலேன்னா என்னை அடிச்சே கொன்னு போட்டுடுங்கன்னு மறுபடியும் அழுது காலைப் பிடிக்கறா. என்ன பாக்கியலட்சுமி நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். நீயும் ரவியும் நட்பா பழகினது எனக்கு தெரியும். அடுத்த கட்டத்துக்கு காதல்னு போயிருக்கீங்க.

சொல்லி இருந்தால்
என்கிட்டே சொல்லி இருந்தால் நானே உங்க கல்யாணத்தை சமாதானமா பேசி முடிச்சு வச்சிருப்பேன்னு சொல்றாங்க. அக்கா தேவராஜ் சார் அங்கே நடந்ததை உங்க கிட்ட சொன்னாரான்னு கேட்கிறாள் பாக்கியலட்சுமி. ம்ம் சொன்னார்.. நானேதான் எல்லாத்துக்கும் காரணம்னு திட்டினார்னு சொல்றாங்க மகா. வேற ஒன்னும் சொல்லலையான்னு பாக்கியலட்சுமி கேட்க, இல்லையேன்னு சொல்றாங்க. அதற்குள், தங்கச்சி வனிதா வந்து பரவால்லேக்கா தேவராஜ் சாரை அக்கா அடிச்சும்னு சொல்ல வரதுக்குள்ள, பாக்கிய லட்சுமி சொல்லாதேன்னு கண்ணால் சொல்லிடறா
நம்பின மகாக்காவை பாக்கியலட்சுமி இப்படி ஏமாத்தலாமா?. அவர் கணவரை அடித்தது சாதாரண விஷயமா?