»   »  சினேகன் பெண்களை பொசுக்கு பொசுக்குன்னு கட்டிப்பிடிப்பது ஏன் தெரியுமா?

சினேகன் பெண்களை பொசுக்கு பொசுக்குன்னு கட்டிப்பிடிப்பது ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை சினேகன் கட்டிப்பிடிப்பதற்கு காரணம் உள்ளதாம்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களின் கண்களில் நீரை பார்த்துவிட்டால் கவிஞர் சினேகன் ஓடி வந்து கட்டிப்பிடித்து தடவித் தடவி ஆறுதல் சொல்வார். இதனால் அவருக்கு டாக்டர் என்று பெயர் வைத்துள்ளார் ஹரிஷ்.

சினேகன் கட்டிப்பிடி வைத்தியம் செய்ய காரணம் உள்ளதாம்.

பாசம்

பாசம்

சினேகன் மீது உள்ள அன்பு, நம்பிக்கை, பாசத்தால் அவரை தேடி பிற போட்டியாளர்கள் வருகிறார்களாம். அன்பை வெளிப்படுத்த கை கொடுப்பது போன்று சினேகன் கட்டிப்பிடிக்கிறாராம்.

சினேகன்

சினேகன்

நான் என்ன வேணும்னா கட்டிப்பிடிக்கிறேன் பாசத்தை தேடி வராங்க அதனால் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துகிறேன். அதைப் போய் தப்பாக பேசுறாங்க என்கிறார் சினேகன்.

நமீதா

நமீதா

நமீதா மேடம் பக்கத்தில் போக பயந்தோம். ஆனால் அவர் என் அன்பை புரிந்து கொண்டு வந்து கட்டிப்பிடித்தார் என்று சினேகன் தெரிவித்துள்ளார். சினேகன் நமீதாவின் முதுகை தடவியதை யாராலும் மறக்க முடியாது.

கமல்

கமல்

சினேகனின் கட்டிப்பிடி மற்றும் தடவியல் வேலை குறித்து கமல் ஹாஸனுக்கும் தெரிந்துள்ளது. தடவியல் தெரிந்தவர் சினேகன் என்று கமலே நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

பெண்கள்

பெண்கள்

பெண் போட்டியாளர்கள் சினேகனின் பிடியில் இருந்து விலக முயன்றாலும் அவர் விடாமல் கட்டிப்பிடிப்பதும் கமலுக்கு தெரிந்துள்ளது. சினேகன் காயத்ரி அழுதால் மட்டும் கட்டிப்பிடிக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lyricist Snehan has explained as to why he is hugging the female contestants in the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil