Just In
- just now
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 37 min ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
- 47 min ago
குளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1
- 1 hr ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
Don't Miss!
- Sports
கட்டிப்பிடித்து கொண்டாடிய சாஸ்திரி.. கண்ணீரில் சிராஜ்.. ஓடி வந்த நடராஜன்..கொடி நாட்டிய இந்தியா!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- News
சசிகலா அதிமுகவிலேயே இல்லை..சிறையில் இருந்து வந்தாலும் 100% இணைக்க வாய்ப்பில்லை - முதல்வர் உறுதி
- Lifestyle
இந்த அறிகுறிகள் உள்ள மனைவியிடம் கணவன் ஜாக்கிரதையா இருக்கணுமாம்...இல்லனா பிரச்சனைதான்...!
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 'நாதஸ்' திருமுருகனுக்கு வேற வேலையே இல்லையா.. 'ஐடியா' அவுட்டாகிப் போச்சா!!
சென்னை: வர வர மாமியார்.. இந்தப் பழமொழி நாதஸ்வரம் இயக்குநர் திருமுருகனுக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கும். காரணம் அவர் வர வர அரைத்த மாவையே அரைக்க ஆரம்பித்திருக்கிறார்..
மெட்டி ஒல மூலம் ஹிட்டாகிப் போன திருமுருகன் அதற்குப் பிறகு சினிமாவுக்குப் போனார். 2 படம் கொடுத்தார். ஒன்று ஹிட்.. இன்னொன்று டவுன்.. அதன் பிறகு மீண்டும் டிவிக்கே திரும்பினார்.
இவரது இயக்கம், நடிப்பு, தயாரிப்பில் வரும் நாடகம்தான் நாதஸ்வரம். மெகா சீரியல்.. எனவே ரொம்ப காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.. நடிப்பவர்களுக்குக் கொஞ்சம் கூட போரடிக்காமல்.

ஒரே கய்யா முய்யா சத்தம்
நாதஸ்வரம் சீரியலில் சிலருடைய குரல்கள் அப்படியே எலிக்குஞ்சு கீச் கீச்சென்று கத்துமே அப்படித்தான் இருக்கிறது. பழைய ரேடியோ பொட்டியை காதுக்குள் திணித்துக் கொண்ட பீலிங் வரும் அவர்களின் கொரல்களைக் கேட்கும்போது.

மேட்டர் என்னென்னா...
திருமுருகன் மெட்டி ஒலியின்போதே ஒரு புது ஐட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதாவது விளம்பர இடைவெளியே இல்லாமல் ஒரு எபிசோட் என்று. அது அப்போது செம ஹிட்டானது.

படத்துலேயும் அதே போல
இதைத் தொடர்ந்து தான் இயக்கிய முதல் படமான எம் மகனிலும் ஒரு பாடலை முழுவதும் இயற்கையான சத்தத்தை வைத்தே இசையமைத்து புதுமையைப் புகுத்தினார்.

அட மறுபடியும் அதே கரட்டாண்டி
இந்த நிலையில் விளம்பர இடைவெளியே இல்லாமல்.. என்ற பழைய அஸ்திரத்தை தற்போது மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

அட இப்பத்தானப்பா கேப்பே விடாம பேசினீங்க...
சில வாரங்களுக்கு முன்பு அதே விளம்பர இடைவெளியில்லாத ஒரு எபிசோடை ஒளிபரப்பினர்.

ஆனால் லைவ் ஆச்சே...
அதை விட முக்கியமாக அதை லைவ் ஆகவும் ஒளிபரப்பி உலக சாதனையும் படைத்தார்கள்.

மறுபடியும் கேப்பே விடாமல்
இந்த நிலையில் தற்போது மீண்டும் கேப்பே இல்லாமல் கெடா வெட்ட அதாவது எபிசோடை ஒளிபரப்பவுள்ளனர். அதாவது இன்று இரவு நாதஸ்வரம் சீரியலை பார்ப்போர், விளம்பர இடைவெளியே இல்லாமல் பார்க்க முடியுமாம்.

ஒரு வேளை நாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி பார்த்தா...
ஒரு வேளை நீங்க நாதஸ்வரம் சீரியலுக்குப் பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடப் போகும் போட்டியைப் பார்ப்பதாக இருந்தால் இந்த செய்தியை இந்த ஸ்லைடோடு படிக்காமல் நிறுத்தி விட்டு மேட்ச் பார்க்கப் போகலாம்.

அட .. முருகா..
கேப்பே இல்லாமல் எபிசோட் ஒளிபரப்புவது, லைவ் ஆக ஷோ காட்டுவது போல வே்ற ஏதாவது புதுமையாக இருந்தால் அதை செய்யலாமே திருமுருகன்... மாறாக ஒரே ஐட்டத்தையே திரும்பத் திரும்பச் செய்தால் மக்கள் கேப் விட்டு விட்டால்...
ஏதோ மனசுக்குத் தோண்றியது... சொல்லிட்டோம்!