»   »  மனைவியை கை நீட்டி அடிக்கிறவன்தான் வீரமான ஆம்பளையோ?

மனைவியை கை நீட்டி அடிக்கிறவன்தான் வீரமான ஆம்பளையோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெண்களை அழவைக்கும் அழுகாச்சி காவியங்களாக டிவி சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அவர்களை உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில் இப்போது காட்சிகள் அமைக்கப்படுகின்றன. எல்லாம் டிஆர்பி படுத்தும் பாடு என்கின்றனர்.

முற்போக்கான வசனங்கள் பேசும் டிவி சீரியல்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. பெண்களை போற்றும் வகையில் சீரியல் எடுக்கும் இயக்குநர்கள் கூட இப்போது கணவர்கள் பெண்களை கன்னத்தில் அறைவது போல எப்படியாவது ஒரு காட்சி வைத்து விடுகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடரில் சொத்துக்களை பிரித்துக்கேட்கும் மருமகளிடம், ஒரு மாதம் டைம் கொடுத்து வீரமான ஆண்மகனாக மாற்றிக்காட்டச் சொல்கிறார் மாமியார் வாணி. அடுத்து நடப்பதுதான் கதையின் பரபரப்பு.

வீரமான சூர்யா

வீரமான சூர்யா

25 ஆண்டுகாலமாக அம்மாவிற்கு அடங்கிய பிள்ளையாக, எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்கும் பிள்ளையாக வக்கீலுக்கு படித்தும் கோர்டுக்குப் போகாத அம்மாஞ்சியாக இருக்கும் மகனுக்கு பயிற்சி கொடுக்கிறார் அப்பா பூமிநாதன்.

சூப்பர் ட்ரெயினிங்

சூப்பர் ட்ரெயினிங்

கோழைத்தனமாக, மனைவிக்கு பயந்து நடுங்கும் மகனை, உலகத்தை தைரியமாக எதிர்கொள்ளத் தயங்கும் சூர்யாவை வீரமான ஆம்பளையாக மாற்ற நினைத்து சில பல பயிற்சிகள் கொடுத்து ஒரே மாதத்தில் தைரியமான ஆணாக மாற்றி காட்டுகிறார் அப்பா பூமிநாதன்.

அம்மா அப்பாதான் சொத்து

அம்மா அப்பாதான் சொத்து

சொத்து ஒரு பக்கம்... அம்மா அப்பா ஒரு பக்கம் என்று வைத்துக்கொண்டு எது வேண்டுமோ எடுத்துக்கோ என்று கூற சூர்யாவோ எனக்கு அம்மா அப்பாதான் வேண்டும் என்று அவர்கள் பின்னர் நிற்க... அதைப்பார்த்து மனைவி டிம்பிள் கோபத்தோடு பேச உடனே வீரமான சூர்யா தன் மனைவி டிம்பிளைக் கை நீட்டி அடித்து தன் அம்மாவின் காலில் விழ வைக்கிறான்.

இப்பத்தான் நல்லாயிருக்கு

இப்பத்தான் நல்லாயிருக்கு

இதுநாள்வரை தன் மனைவியை நீங்க.... வாங்க... போங்க... என்று மரியாதையாக அழைத்த சூர்யா, வீரமான ஆணாக மாறிய உடன் நீ... வா... போ... என்று மனைவியை ஒருமையில் கூப்பிடுவதைப் பார்த்து பெண் கொடுத்த மாமியாருக்கே பெருமை தாங்கலைப்பா... "மாப்ளே... இப்போதான் நீங்க சூப்பரா பேசுறீங்க என்ற சர்டிபிகேட் வேறு தருகின்றனர்.

வாய் பிளந்த ராணி

வாய் பிளந்த ராணி

இந்த சம்பவத்தை ராணி வீட்டுக்கு வந்து பாயிண்ட் சொல்ல அதைக் கேட்டு சித்தி ராணிக்கு பெருமை தாங்கவில்லை. அப்படியா நம்ம சூர்யா? டிம்பிளை அடிச்சிட்டானா என்று கேட்கிறார்.

பச்சைப்புள்ள பாவம்தான்

பச்சைப்புள்ள பாவம்தான்

டிம்பிள் ஒரு பக்கம் அடிவாங்கியது பாவமாக இருந்தாலும்... சூர்யாவுக்கு உப்பில்லாத சோறு போட்டது... உப்பை அள்ளிப் போட்டு சோறு போட்டதற்கு நல்லா வேண்டும் என்று சில ஆதரவு குரல்களும் எழத்தான் செய்கின்றன.

சீரியல்களே இப்படித்தானோ?

சீரியல்களே இப்படித்தானோ?

வாணி ராணி மட்டுமல்ல... தெய்வமகள் சீரியலில் கணவன் செய்யும் தப்பை தட்டிக்கேட்கும் சுஜாதாவை அடிக்க கை ஓங்குகிறான் கார்த்திக். நல்லவேளை அடிக்கவில்லை. இதே பிரகாஷ் ஆக இருந்தால் சத்யாவின் கன்னம் அடி வாங்கியே வீங்கியிருக்கும். பலமுறை அடிவாங்கிய அனுபவம் சத்யாவிற்குத்தானே இருக்கிறது.

ஆம்பளையும் அழுவாங்க

ஆம்பளையும் அழுவாங்க

பெண்களை அடிக்க வைத்து டி.ஆர்.பி ரேட்டிங்கை எகிற வைப்பது ஒருபுறம் இருக்க... ஆண்களையும் அழவைக்கிறார்கள். வம்சம் சீரியலில் அர்ச்சனாவின் கணவன் பொன்னுரங்கம் அழுவதைப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

இது சாம்பிள்தான்

இது சாம்பிள்தான்

பெண்களை கண்ணீர் சிந்த வைக்கும் அழுகாச்சி காவியங்கள்... உளவியல் ரீதியாக உடல்ரீதியாக துன்புறுத்தும் சீரியல்கள்தான் இன்றைக்கு அதிகம் எடுக்கப்படுகின்றன. இதுக்கு ஒரு விடிவு காலம் எப்போது வருமோ?

English summary
In Vani Rani Serial Surya beats his wife because she dares to question him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil