»   »  வாணி ராணி: புதைக்கப்பட்ட பூமிநாதன் இன்றைக்காவது வெளியே வருவாரா?

வாணி ராணி: புதைக்கப்பட்ட பூமிநாதன் இன்றைக்காவது வெளியே வருவாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சவப்பெட்டிக்குள் வைத்து மண்ணில் புதைக்கப்பட்ட வாணியின் கணவர் பூமிநாதன் இன்றைக்காவது வெளியே வருவாரா என்று வாணி ராணி சீரியல் பார்க்கும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ராணி பிராத்தனைக்கு பலன் கிடைக்கணும். எப்படியாவது பூமிநாதனை, வாணி காப்பத்தணும் என்று டுவிட்டரில் வேண்டுதல் வைக்கின்றனர் ரசிகர்கள்.

அதே சமயத்தில் சினிமா சீன்களை காப்பியடித்து சீரியலில் சீன் வைக்க ஆரம்பித்து விட்டார்களே என்று கிண்டலடிக்கின்றனர் வலைஞர்கள்.

ராதிகாவின் வாணி ராணி

ராதிகாவின் வாணி ராணி

சன்டிவியில் இரவு 9-30க்கு ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடரில் இப்போது திடீர் திருப்பங்களும், பரபரப்பு காட்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது. வாணியின் கணவர் பூமிநாதனை சவப்பெட்டிக்குள் வைத்து உயிரோடு புதைத்து விட்டனர்.

தேடி அலையும் வாணி

தேடி அலையும் வாணி

கணவர் புதைக்கப்பட்ட இடத்தை தேடி அலைந்த வாணி ஒரு வழியாக பூமிநாதன் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து விட்டார். ஆம்புலன்ஸ், போலீஸ் சகிதமாக பூமிநாதனை காப்பாற்ற வந்து விட்டார் வாணி.

நாலு நாள் ஆச்சேப்பா

நாலு நாள் ஆச்சேப்பா

நாலு எபிசோடுகளாக இதேதான் போய்கொண்டிருக்கிறது. பூமிநாதனை சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்து நான்கு நாள் ஆகிவிட்டது. இன்றைக்காவது வெளியே வந்துவிடுவாரா பூமிநாதன் என்பதை கிரியேட்டிவ் ஹெட் ராதிகாதான் முடிவு செய்ய வேண்டும்.

கடவுளே காப்பாத்து

பூமிநாதனை எப்படியாவது காப்பாத்தணும், ராணி வேண்டுதல் பலிக்கணும் என்பது டுவிட்டர்வாசிகளின் கவலை.

எலி, பாம்பு வருதுப்பா

எலி, பாம்பு வருதுப்பா

சவப்பெட்டிக்குள் படுத்திருக்கும் பூமிநாதனை பார்க்க எலி விசிட் அடிக்கிறது. அதைத் தொடர்ந்து பாம்பு புகுந்து பூமிநாதனில் மேல் எறி இறங்குகிறது எல்லாம் கிராபிக்ஸ்தான் என்றாலும் எப்படியோ ஓட்டை போட்டு பூமிநாதனை மூச்சு விட ஏற்பாடு செய்து விட்டார்கள்.

கணவரை காப்பாற்றிவிடுவாரா?

வாணி ராணியிலாவது தனது கணவரை ராதிகா காப்பாற்றி விடுவார் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர் வலைஞர்கள்.

நாய்கள் ஜாக்கிரதை

ஹாலிவுட் படத்தில் இருந்து சீனை உருவி தமிழ் சினிமாவில் சேர்ப்பார்கள். ஆனால் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நாய்கள் ஜாக்கிரதை படத்தில் வரும் சவப்பெட்டி காட்சியை வாணி ராணி சீரியலில் சீன் ஆக வைத்து விட்டனர் என்றும் வசை பாடுகின்றனர் வலைஞர்கள்.

பூமி வந்தா சரிதான்

பூமி வந்தா சரிதான்

எது எப்படியோ வாணி ராணி தொடரில் பூமிக்குள் புதைக்கப்பட்ட பூமிநாதனை இன்றைக்காவது வெளியே எடுத்தால் சரிதான். வெளியே வந்து விடுவாரா? பூமிநாதன்.

English summary
Vaani's husband Bhoominathan has been identified where he was buried alive. The serial goes in a crucial way now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil