twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குரல் கம்ம வசனம் பேசி கண்ணீர் விட்டு அழும் ஆண்கள் விருதை சின்னவருக்கு தரலாமா?

    |

    சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் சில சமயம் .போரடிக்குதுன்னு சொன்னாலும்,சில சமயங்களில் மனசை கரைய வைப்பதா இருக்கு.

    முத்துசெல்வியை விஜயலட்சுமி அம்மாவின் ஓரகத்தி அடிப்பது பாவமாக இருந்தாலும், சின்னவரை காதலிக்கறேன்னு முத்துச்செல்வி சொல்லிக்கிட்டு ஓவர் எமோஷனலாட பேசறது எரிச்சலா இருக்கு.

    தாய் மாமன் உறவு என்பது யாருக்கும் விட்டு கொடுக்க முடியாத உறவு. இதை சவுந்தர்யாவிட்டு கொடுத்து நிற்பது நெருடலா இருக்கு.

    டச் சஞ்சீவ் நடிப்பு

    டச் சஞ்சீவ் நடிப்பு

    மேற்கண்ட குறைகள் எப்படி இருந்தாலும், சஞ்சீவ் நடிப்பால் ஸ்கோர் பண்ணி பெண்களின் மனதை டச் பண்ணிடறார்.அவருக்கு குடுத்த வேஷத்தை எந்த பிசகும் இல்லாம செய்துடறார்.கதை எப்படி இருந்தா என்ன, யார் நல்லா நடிச்சா என்ன நம்ம வேலையை சரியா செய்வோம்னு நல்லா பண்ணி இருக்கார்.

    சாப்பாடு அக்கா கையால்

    சாப்பாடு அக்கா கையால்

    அக்கா...நாளைக்கு நான் சாமியாடி குறி சொல்ல போறேன்..பச்சை தண்ணி கூட காலையில இருந்து ராத்திரி வரைக்கும் என் தொண்டைக் குழிக்குள்ள இறங்காதுன்னு உனக்கு தெரியும். உன் கையால இன்னிக்கு ஒரு வாய் சாப்பாடு போடுவியா அக்கான்னு கண்ணீரோடு,தொண்டை கம்ம கேட்பது கஷ்டமா இருக்கு.

    சாப்பாடுதானே வாடா

    சாப்பாடுதானே வாடா

    அதுக்கு என்னடா...உனக்கு வயிறார சாப்பாடு போடணும் ...அவ்ளோதானே..வா வந்து உட்காருன்னு சொல்லி ஆசையா பரிமாறறாங்க விஜயலட்சுமி அம்மா..அக்கா எனக்கு இது போதும்க்கா... நாளைக்கு நான் நிம்மதியா சாமியாடுவேன்... தினம் உன் கையால சாப்பாடு மட்டும் கிடைச்சா போதும்க்கான்னு நெகிழ்ந்து பேசறான் கண்ணன்.

    அது நீ சொல்றதுலதான்

    அது நீ சொல்றதுலதான்

    அது நாளைக்கு நீ சாமியாடி சொல்ற குறியிலதாண்டா இருக்கு.சொல்ல முடியாது இதுவே நீ என் கையால சாப்பிடற கடைசி சாப்பாடா கூட இருக்கலாம்னு விஜயலட்சுமி அம்மா சொல்ல உடைந்து போகிறான் கண்ணன்.

    மாமா என்ன தனியா

    மாமா என்ன தனியா

    கண்ணன் தனிமையில் உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்கான். அங்கே வரும் சவுந்தர்யா என்ன மாமா தனியா உட்கார்ந்து இருக்கேன்னு கேட்கறா... ஒண்ணுமில்லை சவுன்டுன்னு சொல்றான். மாமா நீ அழுது இருக்கே.. என்னன்னு என்கிட்டே சொல்லுன்னு கேட்கறா.

    அக்கா சொன்ன வார்த்தை

    அக்கா சொன்ன வார்த்தை

    ஒண்ணுமில்லை சவுண்டு...அக்காகிட்ட ஒரு வாய் சாப்பாடு உன் கையால போடுன்னு கேட்டேன்... ஏன் அம்மா போடலையான்னு கேட்கறா சவுண்டு. இல்லை சவுண்டு..வயிறாரா சாப்பாடு போட்டு...அந்த சோறு தொண்டைக் குழியில் இறங்கி செரிக்க விடாம அக்கா ஒரு வார்த்தை சொல்லிட்டாங்க சவுண்டுன்னு சொல்லிட்டு சஞ்சீவ் அழும் போதும், உதிர்ந்து வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே பேசும்போதும் சஞ்சீவ் நடிகர் விஜயை நினைவு படுத்தறார்.

    நீங்க கவனிச்சு பாருங்க

    நீங்க கவனிச்சு பாருங்க

    சீரியல்களைப் பார்க்கறவங்க நல்லா கவனிச்சு பாருங்க...யாருமே அழும்போது கண்ணீர் விட்டு அழறதில்லை.முகத்தை மட்டும் அழற மாதிரி கோணலாக்கி வச்சுக்கிட்டு நடிக்கறதுதான் இப்போ இருக்கு. கண்ணீரே வராது.

    அதிகமாம் கிளிசரின் விலை

    அதிகமாம் கிளிசரின் விலை

    கிளிசரின் போட்டுக்கிட்டு கண்ணீர் விட யாரும் தயாரா இல்லை.கிளிசரின் விலை வேற எகிறிப் போனதால ,புரடக்ஷன் செலவுல அதிகம் கிளிசரின் வாங்க முடியலையாம். இதுல சஞ்சீவ் விடும் கண்ணீர் நிஜமான நடிப்பில் வரும் கண்ணீர் எனும்போது அவரை பாராட்டத்தான் வேணும்...

    English summary
    Sun TV's kanmani serial occasionally.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X