»   »  நீங்க ஷட்அப் பண்ணுங்க: உங்க வீட்டு பொண்ணு சொன்னால் சும்மா விடுவீங்களா?#OviyaArmy

நீங்க ஷட்அப் பண்ணுங்க: உங்க வீட்டு பொண்ணு சொன்னால் சும்மா விடுவீங்களா?#OviyaArmy

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானது என்றால் அது நீங்க ஷட்அப் பண்ணுங்க என்பது தான்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள நடிகை ஓவியாவை தமிழக ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர் மனதில் பட்டதை பேசுகிறார், செய்கிறார்.

துணிச்சலாக நடந்து கொள்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

ஷட்அப்

ஷட்அப்

நீங்க ஷட்அப் பண்ணுங்க என்று ஓவியா சினேகனை பார்த்து கூறியதை பாருய்யா அந்த பொண்ணு எவ்வளவு மரியாதையாக பேசியுள்ளது என்கிறீர்கள். உங்கள் வீட்டுப் பெண் ஒரு ஆணை பார்த்து இப்படி ஷட்அப் பண்ணுங்க என்றால் சும்மாவிடுவீர்களா?. இல்லை என்பது தான் உண்மை.

திமிர்

திமிர்

ஓவியாவை பாராட்டும் நாம் நம் வீட்டுப் பெண் யாராவது ஒரு ஆணை பார்த்து நீங்க ஷட்அப் பண்ணுங்க என்றால் திமிர் பிடித்தவள் என்போம். வளர்ப்பு சரியில்லை என்று முத்திரை குத்திவிடுவோம். இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

ஓவியா

ஓவியா

ஓவியா மனதில் பட்டதை பேசுகிறார், செய்கிறார் என்று பாராட்டும் நாம் நம் வீட்டு பெண்கள் அதை செய்தால் அகராதி பிடித்தவள், கேரக்டர் சரியில்லாதவள் என்று பட்டம் கட்டுகிறோம்.

நடை

நடை

ரொம்ப பெருசா எல்லாம் வேண்டாம் ஒரு பெண் தலைநிமிர்ந்து நடந்தால் ஆம்புள மாதிரி நடக்கிறாள், குதிரை மாதிரி நடக்கிறாள் என்று கூறி அவரை கிண்டல் செய்கிறார்கள். இதை கேட்கும் அந்த பெண் கூன்போட்டு நடக்கப் பயில்கிறாள்.

ஆசை

ஆசை

நம் வீட்டு பெண்கள் மனதில் பட்டதை பேச, செய்ய அஞ்சுகிறார்கள். நடிகை செய்வதை பாராட்டி ஓவியாஆர்மி உருவாக்கும் நாம் நம் வீட்டு பெண்களுக்கு முதலில் சுதந்திரம் கொடுத்து அவர்களை ஊக்குவிப்போமாக.

English summary
Those who are celebrating Oviya by forming #OviyaArmy should allow their own girls to act according to their wishes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil