Don't Miss!
- News
ரொம்ப அரிதான நிகழ்வு.. "இந்த" தேதியில் இங்கெல்லாம் மழை கொட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த வார்னிங்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஃபீல் ஆன சைத்ரா.. கடைசி நாளாச்சே.. விட மனசே வரலையாம்!
சென்னை : ஸ்கூல் காலேஜ் கடைசி நாள் போல தற்போது யாரடி நீ மோகினி சீரியல் கடைசி நாளைக் கொண்டாடியுள்ளனர் சீரியல் பிரபலங்கள்.
என்னதான் இருந்தாலும் இந்த சீரியலின் இந்த இரண்டு கேரக்டரை தான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் என பீலிங்கை கொட்டியுள்ளார் சைத்ரா.
7
ஆண்டுகளை
எட்டிய
தனுஷின்
விஐபி...குவியும்
வாழ்த்துக்கள்
எல்லாவற்றையும் விடவும் அந்த சீரியலை எப்படி முடிச்சிட்டீங்க என்றுதான் பலர் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

முதல் பார்ட் ஓவர்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் யாரடி நீ மோகினி சீரியல் 4 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலுக்கு என்று ரசிகர்கள் பட்டாளமே உருவாகி இருக்கிறது .இந்த சீரியலை முதலில் பேய் சீரியலாக எதிர்பார்த்து பின்பு வழக்கமான குடும்ப சீரியலாகத் தான் இருந்து வருகிறது. அதுவும் ஒரு கதாநாயகனுக்கு இரண்டு கதாநாயகிகள் போட்டி தான் இதில் ஹைலைட்.

அத்தை மகள்கள்
இந்த சீரியலின் முத்தரசன் ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி இறந்த நிலையில் அவருக்காக இரண்டு அத்தை மகள்கள் போட்டி போடுகின்றனர் .அதில் ஸ்வேதா பணத்திற்காகவும் வெண்ணிலா உண்மையாக முத்தரசனை காதலித்தும் அவருக்காக போட்டி போடுகின்றனர் . அதில் வெண்ணிலாவுக்கு உதவியாக முத்தரசன் முதல் மனைவி பேயாக இருந்து உதவி செய்து வருகிறார் .ஸ்வேதா வெண்ணிலாவை தீர்த்துக்கட்டுவதற்காக பல முறை முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதே கதையைதான் நான்கு வருடமாக ஓட்டிக் கொண்டிருந்தனர்.

திடீர் முடிவு
தற்போது இந்த சீரியலின் விறுவிறுப்பான கட்டத்தை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த சீரியல் திடீரென முடிக்கப் படுகிறது என்ற செய்தியைக் கேட்டதும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர் .ஆனால் நெட்டிசன்கள் இந்த சீரியல் எப்போது முடிப்பீர்கள் என்று ஆவலாக காத்திருக்கின்றனர் .ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சீரியல் டீம் இருந்து வருகிறது.

சைத்ரா ரெட்டி
இந்த சீரியலில் ஸ்வேதாவாக நடித்து வந்த சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு வீடியோவை ஷேர் செய்து இருக்கிறார். அதில் இன்றே கடைசி நாள் சூட்டிங் என்கிறது மாதிரி பீலிங் காக வெளியிட்டிருக்கிறார் .அதில் நான் ஸ்வேதா ,வெண்ணிலா கேரக்டரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்று கேப்ஷன் போட்டிருக்கிறார் .
Recommended Video

டாட்டா
அதைப் பார்த்ததும் ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .அந்த வீடியோவில் ஹைலைட்டே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை எனும் பாட்டு தான் இவர் வீடியோவை பிடித்துக் கொண்டு இருக்க மாடியிலிருந்து சீரியல் நடிகர்கள் ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் டாட்டா காட்டிவிட்டு சென்று கொண்டிருக்கின்றனர். இதை பார்த்ததும் ரசிகர்கள் மிஸ் யூ என்று கமென்ட் போட்டு வருகின்றனர்.

அடுத்து என்ன
அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் முத்தரசனாக நடிக்கும் ஸ்ரீகுமாரும் வெண்ணிலாவாக நடிக்கும் நட்சத்திராவும் இருக்கும் போட்டோவை ஸ்ரீகுமார் வெளியிட்டிருக்கிறார் .இந்தப் போட்டோவை பார்த்ததும் இன்றுதான் கடைசி நாளா என்றும் உங்களுடைய அடுத்த ப்ராஜெக்ட் என்னவென்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் .இந்த போஸ்ட்க்கு நட்சத்திரா முத்து மாமா என்று கமெண்ட் போட்டிருக்கிறார்.