»   »  ஷூட்டிங்கில் சண்டை: மாத்தி மாத்தி 'பளார்' விட்ட சின்னத்திரை நடிகர், நடிகை

ஷூட்டிங்கில் சண்டை: மாத்தி மாத்தி 'பளார்' விட்ட சின்னத்திரை நடிகர், நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஏ வாதா ரஹா இந்தி தொலைக்காட்சி தொடரின் ஹீரோவும், ஹீரோயினும் ஷூட்டிங்ஸ்பாட்டில் ஒருவரையொரு நிஜத்தில் அறைந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏ வாதா ரஹா என்ற இந்தி தொலைக்காட்சி தொடரின் நாயகன், நாயகியாக நடித்து வருபவர்கள் அன்குஷ் அரோரா மற்றும் சோனால் வெங்குர்லேகர். இருவரும் நல்ல நண்பர்களாக தான் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஷூட்டிங்ஸ்பாட்டில் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.

சண்டை

சண்டை

ஒரு காட்சியில் நடிக்க அன்குஷ் மற்றும் சோனால் பயிற்சி எடுத்துள்ளனர். அப்போது இயக்குனர் ஆக்ஷன் என்று கூறியும் சோனால் தயாராகாமல் இருந்ததால் அன்குஷ் கோபம் அடைந்து அவரை திட்டியுள்ளார்.

அறை

அறை

அன்குஷ் சோனாலை கெட்ட வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சோனால் அன்குஷை ஓங்கி அறைந்துவிட்டார். பதிலுக்கு அன்குஷும் சோனாலை அறைந்தார்.

போலீஸ்

போலீஸ்

அறை வாங்கிய கையோடு சோனால் போலீஸுக்கு போன் செய்துவிட்டார். நாமே பேசித் தீர்க்கலாம் போலீசார் வந்தால் ஷூட்டிங் பாதிக்கும் என்று தயாரிப்பு தரப்பு சோனாலிடம் தெரிவித்துள்ளது.

மன்னிப்பு

மன்னிப்பு

அன்குஷ் தன்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என சோனால் தெரிவித்துள்ளார். தயாரிப்பு தரப்பு கொடுத்த பிரஷரால் அன்குஷ் வேறு வழியில்லாமல் சோனாலிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அன்குஷ்

அன்குஷ்

தன் மீது எந்த தப்பும் இல்லை என்றும், சோனால் மீது தான் தப்பு என்றும் இதற்கு ஸ்பாட்டில் இருந்த 70 பேர் சாட்சி என அன்குஷ் தெரிவித்துள்ளார். இறுதியில் சோனாலும், அன்குஷும் சண்டையை மறந்து கை குலுக்கி நடித்துள்ளனர்.

English summary
Yeh Vaada Raha's actors Ankush Arora and Sonal Vengurlekar recently got into news. Apparently, the actors lost their cool and slapped each other!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil