twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Negative Roles Actress: வில்லன்களை விட.. வில்லிகள்தாய்யா ரொம்ப பயமுறுத்தறாங்க!

    |

    சென்னை: எந்த சேனல்களை மாற்றி சீரியல்களைப் பார்க்கலாம் என்றாலும், இளம் பெண்கள் வில்லிகளும், நடுத்தர வயதுப் பெண்கள் வில்லிகளும் என்று பயமுறுத்துகிறார்கள்.

    இப்போது சீரியல் என்றால் ஒரு வில்லி மட்டுமல்ல ஒரு சீரியலில் பல வில்லிகள் என்று பயம் காட்டறாங்க.இதற்கு காரணம் கதை என்று ஒன்று இருந்தாலும், இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன.

    அழகிய இளம் பெண்கள் கூட பெரிய அல்லது நடுத்தர வயது வில்லியாக மாறி நடிக்க முன் வருகிறார்கள்.ஆக மொத்தம் சீரியல்களில் வில்லி நடிகைகளுக்கு பஞ்சம் இல்லை.கதையின் நாயகிகளைத் தேடுவதில்தான் நாட்கள் அதிகம் எடுக்கின்றன.

     சம்மதம் இல்லை

    சம்மதம் இல்லை

    படித்து முடித்துவிட்டு பல இளம் பெண்களுக்கு மீடியாவில் வேலை பார்க்க வேண்டும் அல்லது சீரியல்களில் நடிக்க வேண்டும் என்று லட்சியம் இருக்கும். ஒரு சில பெண்களுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். இன்றைய தமிழ்ப் பெண்கள் படித்து முடித்தவுடன் கல்யாணமாகி செட்டிலாகிவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். சினிமாவிலோ,
    மீடியாவுக்கோ வர ஆசைப்படும் பெண்களுக்கு பெற்றோர்கள் அனுமதி தருவது என்பது மிக கடினமாக இருக்கிறது. வேலைக்குப் போகட்டும், அல்லது மேல படிக்கட்டும், இல்லையா கல்யாணம் செய்துகிட்டு என்ன வேணா செய்யட்டும்னுதான் பெத்தவங்க நினைக்கறாங்க.

     சில கட்டுப்பாடுகள்

    சில கட்டுப்பாடுகள்

    அப்படியே சம்மதம் தெரிவித்தாலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கிறார்கள் பெத்தவங்க. அதாவது, நடி ஆனால், ஆண்கள் யாரையும் தொடாமல் நடின்னு கட்டுப்பாடும் விதிக்கறாங்க. இப்படி நடக்க வேண்டும் என்றால் எப்படி கதாநாயகியாக நடிக்க முடியும்.அதனால், வில்லி கேரக்டரில் நடிக்க முடிவு செய்து, அதே நோக்கத்தோடு வாய்ப்பும் தேடுகிறார்கள். அதனால்தான், சின்ன பெண்களாக இருந்தாலும், நடுத்தர வயது கெட்டப் போட்டு, வில்லியாகவோ, அம்மாவாகவோ,அக்காவாகவோ, தங்கையாகவோ நடிக்கிறார்கள்.

     வில்லிகள் அதிகம்

    வில்லிகள் அதிகம்

    இதில் அதிகம் நடிக்க வாய்ப்பு கிடைப்பது வில்லிகளாகத்தான்.அதனால்தான் கதையும் மிக வஞ்சத்தில் பின்ன வசதியாக இருக்கிறது. இப்படி வில்லியாக நடிக்க இளம் பெண்கள் வாய்ப்பு கேட்பதன் மூலம், இயக்குநர்களுக்குத்தான் சந்தோசம் அதிகமாக இருக்கும், கதையை வஞ்ச வலையில் மாட்டி, அதை காட்சிகளாகக் கொண்டு செல்லும்போது, அதிக பார்வையாளர்களை ஈர்க்க முடிகிறது.

     கட்டிப் பிடிக்க

    கட்டிப் பிடிக்க

    கதாநாயகியாக நடிக்க பலபெ ண்கள் முன் வந்தாலும், கட்டிப்பிடிக்க மாட்டேன்,ரொமான்ஸ் செய்ய விட மாட்டேன்னு கண்டிஷன் போடும் பெண்களும் அதிகம் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி நடிப்பவர்கள் வேண்டும் என்கிற பட்சத்தில் இயக்குநர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்து, கதையை நன்றாக கொண்டு போகிறார்கள். ரொமான்ஸ் செய்வதற்கு என்று வேறு ஜோடிகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறார்கள்.

    உண்மை சுடுகிறதா, இல்லை புரிகிறதா?

    English summary
    Despite changing channels, you can watch serials, young girls are afraid of bow and middle aged women are bow.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X