»   »  உத்தமவில்லன், ரஜினிமுருகனை கைப்பற்றிய ஜீ தமிழ் டிவி!

உத்தமவில்லன், ரஜினிமுருகனை கைப்பற்றிய ஜீ தமிழ் டிவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் நடித்துள்ள உத்தமவில்லன், சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள ரஜினி முருகன் படங்களின் சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் பெரும் போட்டிக்கிடையே கைப்பற்றியுள்ளது.

லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்' மற்றும் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘உத்தம வில்லன்'.


‘திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் தயாரித்து வரும் மற்றொரு படம் ‘ரஜினி முருகன்'. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார்.


உத்தமவில்லன்

உத்தமவில்லன்

நடிகர் ரமேஷ் அர்விந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடித்துள்ள உத்தமவில்லன் படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாகிறது உத்தமவில்லன். இந்தப்படத்தை உலகம் முழுக்க வெளியிடும் உரிமையை பிரபல ஈராஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது.


ரஜினி முருகன்

ரஜினி முருகன்

சிவகார்த்திக்கேயனின் ரஜினி முருகன் படமும் அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தை கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் இப்படத்தை விநியோகம் செய்கிறது.


ஜீ தமிழ் டிவி

ஜீ தமிழ் டிவி

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த 2 படங்களின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.


ஜெயா டிவியில் ஆடியோ வெளியீடு

ஜெயா டிவியில் ஆடியோ வெளியீடு

உத்தமவில்லன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழா விரைவில் ஜெயாடிவியில் வெளியாக உள்ளது. அதே நேரத்தில் படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் டிவி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


English summary
Popular private television channel, Zee Tamil has bagged the satellite rights of two important upcoming films- Kamal Haasan's Uthama Villain and Sivakarthikeyan's Rajini Murugan. We hear that the channel recently sealed the deal with the makers- Thirrupathi Brothers. While Uthama Villain has Kamal Haasan and Pooja Kumar playing the lead, and is directed by Ramesh Aravind; Sivakarthikeyan's Rajini Murugan is directed by Ponram of Varuthapadatha Vaalibar Sangam. Both films are slated for summer release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more