தேசப்பற்றை உயர்த்தும் வகையில்...ரசனையான நிகழ்ச்சிகளை மாஸ்டர் பிளான் செய்த ஜீ தமிழ்

சென்னை: 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக உங்கள் ஜீ தமிழில் 'கர்ணன்' திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட நாடே தயாராகி வரும் நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சி தமது தீவிர ரசிகர்களுக்காகவும், நேயர்களுக்காகவும் அதிரடியான திரைப்படங்களை ஒளிபரப்பவுள்ளது.

வரும் ஆகஸ்ட் 15 அன்று நமது சுதந்திர உணர்வையும், தேசப்பற்றையும் மேலும் உயர்த்தும் வகையில் பிரம்மாண்ட வெற்றித் திரைப்படங்கள் மற்றும் நேயர்களின் விருப்பமான நிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாக ஒளிபரப்ப ஜீ தமிழ் தொலைக்காட்சி தயாராகியுள்ளது.

ஏகோபித்த பாராட்டுகளை

ஏகோபித்த பாராட்டுகளை

சுதந்திரத் திருநாளின் சிறப்புத் திரைப்படமாக உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக 2021-ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'கர்ணன்' ஒளிபரப்பாகவுள்ளது. நடிகர்கள் லால், யோகி பாபு, நடராஜன் சுப்ரமணியம் மற்றும் அறிமுக நடிகை ரஜீஷா விஜயன் ஆகியோரது தத்ரூபமான நடிப்பில் உருவாகி, ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற இத்திரைப்படம் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும்.

தொடர் அடக்குமுறையை

தொடர் அடக்குமுறையை

இராணுவப் பணியில் சேர காத்திருக்கும் ஒரு கோபக்கார கிராமத்து இளைஞனின் வாழ்க்கையே இதன் கதைக்களமாகும். ஒடுக்கப்படும் தனது கிராமத்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக அதிகாரிகளை எதிர்க்கும் கதாநாயகன் பல விதமான இன்னல்களை எதிர்கொள்கிறான். அந்த சமூக அமைப்பு தன் மக்களின் மீது செலுத்தும் தொடர் அடக்குமுறையையும், அவர்கள் மீது வேண்டுமென்றே திணிக்கப்படும் அநீதியையும் எதிர்த்து தீர்க்கமாகவும், அயராமலும் போராடும் கர்ணனின் கதை படமாக்கப்பட்டுள்ளது.

லட்சியத்தை அடைவதே

லட்சியத்தை அடைவதே

சுதந்திர தினத்தை ஒரு லட்சியத்துடனும், தேசபக்தியுடனும் துவங்கும் நோக்கில் காலை 8 மணிக்கு, அல்லு அர்ஜுன் மற்றும் அனு இம்மானுவேல் நடித்த 'என் பேரு சூர்யா என் வீடு இந்தியா'திரைப்படத்தை நேயர்கள் காணலாம். ஒரு இளைஞன் தான் யார் என்பதை உணர்ந்து, தேசத்திற்கு கடமையாற்ற வேண்டும் என்கிற தனது இலட்சியத்தை அடைவதே இத்திரைப்படத்தின் கதை.

எதிரெதிர் அணிகளாக

எதிரெதிர் அணிகளாக

இதனைத் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு சுவாரஸ்யமான திகில் திரைப்படமான 'மிருகா' ஒளிபரப்பாகும். பின்பு, பிற்பகல் 1 மணிக்கு பிரபல விவாத நிகழ்ச்சியான, "தமிழா தமிழா - ஸ்டார்ஸ் ஸ்பெஷல்" இரண்டு மணிநேர சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதில், *பிரபல நட்சத்திரங்களும், அவர்களது குடும்பத்தினர்களும்* இரு எதிரெதிர் அணிகளாக பங்கேற்கவுள்ளனர்.

வெற்றி விழா கொண்டாட்டத்தில்

வெற்றி விழா கொண்டாட்டத்தில்

பிற்பகல் 3 மணிக்கு, 2017-ம் ஆண்டில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான நிகழ்ச்சிகளில் ஒன்றான 'யாரடி நீ மோகினி - வெற்றி விழா' கொண்டாட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். 1250 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த தொடரின் கொண்டாட்டத்தில் அதில் நடித்த நடிகர்-நடிகைகள் மற்றும் மொத்த குழுவினரும் கௌரவிக்கப்படுவது மட்டுமல்லாமல்; ஏப்ரல் 2017-ம் ஆண்டு இத்தொடர் துவங்கப்பட்ட போது நிகழ்ந்த பல்வேறு இனிமையான தருணங்கள், அனுபவங்கள் மற்றும் ஆச்சரியங்களும் நேயர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படவுள்ளது.

அறிமுகம் செய்து

அறிமுகம் செய்து

ஜீ தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் புத்தம் புதிய பிரைம் டைம் நிகழ்ச்சியான- 'நினைத்தாலே இனிக்கும்'நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்கவிழாவும் அன்றைய தினத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. ஆர்.ஜே. விஜய் மற்றும் கிகி விஜய் ஆகியோர் தொடரின் கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்து வைத்து, நேயர்களிடம் அந்நிகழ்ச்சியைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர உள்ளனர்.

வரிசையாக

வரிசையாக

டி ஆர் பி ரேட்டிங்கில் அரசு விடுமுறை நாட்களில் கடுமையான போட்டி நிலவி வரும்- என்பதை நன்கு புரிந்து கொண்டு சுவாரசியமான நிகழ்ச்சிகளை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்றுக்கொண்டு வரிசையாக விதவிதமான திரைப்படங்கள் மற்றும் என்டர்டைனிங் நிகழ்ச்சிகளை கொடுத்து மக்களை மகிழ்விக்க ஜீ தமிழ் பக்காவாக பிளான் செய்து உள்ளது.

ஒவ்வொரு முறையும்

ஒவ்வொரு முறையும்

ஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் தலைமை அதிகாரி (கிரியேட்டிவ் ஹெட்) தமிழ்தாசன் தனது பலம் கொண்ட திறமையான அணியை பயன்படுத்தி வெரைட்டியான நிகழ்ச்சிகள் கொடுப்பதில் ஒவ்வொரு முறையும் தன்னை நிரூபித்துள்ளார். இந்த முறையும் தமிழ்தாசன் தீட்டிய திட்டங்கள் மற்ற டிவி சேனல்களுக்கு ஒரு டஃப் ஃபைட்டாகத்தான் இருக்கும் என்பது ஊடக நண்பர்கள் அறிந்த விஷயம்.

அதிகம் பார்ப்பார்கள்

அதிகம் பார்ப்பார்கள்

யாரடி நீ மோகினி சீரியல் பார்த்தவர்கள் இன்றுவரை இணையதளத்தில் தொடர்ந்து பலவிதமான கருத்துக்களையும் தங்களது அபிப்பிராயத்தையும் கொடுத்த வண்ணம் உள்ளனர் .யாரடி நீ மோகினி சீரியல் மூலம் புகழ்பெற்ற அத்தனை கதாபாத்திரங்களும் இந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி பல விஷயங்களை தங்களது அனுபவங்களை பதிவிட போகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. சீரியல் உலகத்தில் ஒரு குறிப்பிட்ட வயதினர் மட்டுமே அதிகம் பார்ப்பார்கள் என்ற அந்த நம்பிக்கையை உடைத்து யாரடி நீ மோகினி குழு அனைவரையும் பார்க்க வைத்து வெற்றி பெற்ற கதை பலவற்றை உண்மையான பதிவுகளை , சம்பவங்களை சொல்ல இருக்கிறார்கள்.

நிகழ்ச்சிகளை அடுக்கி

நிகழ்ச்சிகளை அடுக்கி

வரும் ஞாயிறு சுதந்திர தினம் அன்று சுதந்திர தாகத்துடன், குடும்பத்துடன் டிவி முன்பு உட்கார்ந்து என்ஜாய் செய்யக்கூடிய ஒரு நல்ல நாளாக பல நிகழ்ச்சிகளை அடுக்கி உள்ளது ஜீ தமிழ். காலை முதல் மாலை வரை எந்த நிகழ்ச்சி அதிக டிஆர்பி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X