For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வாட்ஸ் தி பிளான் ? தீபாவளிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியை கண்டுமகிழ இதோ செட்யூல்

  |

  சென்னை: வருடத்தின் ஒளிமயமான பண்டிகையான தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில், குதூகலமூட்டும் பல திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

  'குடும்பங்களை ஒருங்கிணைத்து, மகிழ்ச்சியான நீங்கா நினைவுகளை உருவாக்கிட உதவ வேண்டும்' என்பதே ஜீ தமிழின் நோக்கமாகும். திரைப்படப் பிரியர்கள் முதல் ரியாலிட்டி தொடர் ரசிகர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பண்டிகைக் கால பல்சுவைசிறப்பு நிகழ்ச்சிகள் வருகின்ற நவம்பர் 4, வியாழக்கிழமை முழுவதும் ஒளிபரப்பாகும்.

  தீபாவளி அன்று பார்வையாளர்களை மகிழ்விக்க... கலர்ஸ் தமிழ் செய்துள்ள மாஸ்டர் பிளான் தீபாவளி அன்று பார்வையாளர்களை மகிழ்விக்க... கலர்ஸ் தமிழ் செய்துள்ள மாஸ்டர் பிளான்

  பாவளியை மங்களகரமாகத் துவங்கும் வகையில், பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் வழங்கும் ஒளிமயமான எதிர்காலம் ஸ்பெஷல் சிறப்பு ஜோதிட நிகழ்ச்சி காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.

  இந்த ஒன்றரை மணிநேர சிறப்பு நிகழ்ச்சியில், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் விதங்களுக்குப் பின்னணியில் உள்ள அறிவுப்பூர்வமான சிந்தனைகள் குறித்து நேயர்களுக்கு அவர் விளக்கவுள்ளார்.

  சிறப்புப் பட்டிமன்றம்

  சிறப்புப் பட்டிமன்றம்

  அதனைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு, பிரபல தமிழ் பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் அறிஞருமான சுகி சிவம் வழிநடத்தும் தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் ஒளிபரப்பாகும். "பண்டிகைகளைக் கொண்டாடுதல் - நமக்கு கொண்டாடத் தெரியும் அல்லது நம்மால் கொண்டாட முடியவில்லை" என்கிற தலைப்பில் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பிரபல பேச்சாளர்கள் பர்வீன் சுல்தானா, சாந்தாமணி, விஜயா சுந்தரி, அன்பழகன், சுசித்ரா மற்றும் மோகன சுந்தரம் ஆகியோர் பேசவுள்ளனர்.

  கருத்துக்கள் மற்றும் மீம்ஸ்

  கருத்துக்கள் மற்றும் மீம்ஸ்

  பட்டிமன்றத்தைத் தொடர்ந்து, நடிகரும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமான ஜகன் தொகுத்து வழங்கும் "சர்வைவர் - நாங்கள்வேற மாதிரி" நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியில் சர்வைவர் தீவுகளிலிருந்து படகில் திரும்ப வந்த ஆறு போட்டியாளர்களான ஸ்ருஷ்டி டாங்கே, இந்திரஜா, ராம் சி, விஜே பார்வதி, பெசன்ட் ரவி மற்றும் காயத்ரி ரெட்டி உள்ளிட்டோரிடம் ஜகன் உரையாடவுள்ளார். தனது துரிதமான சாதுர்யத்திற்கும், அசத்தலான டைமிங் நகைச்சுவைக்கும் பெயர்பெற்ற ஜகன், போட்டியாளர்களின் அனுபவங்கள் மற்றும் பயணங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவார். மேலும், தீவின் சில ரகசியங்களையும் நேயர்களிடம் வெளியிடவுள்ளார். நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில், இதுவரை சமூக வலைத்தளங்களில் சர்வைவர் குறித்துப் பகிரப்பட்ட கருத்துக்கள் மற்றும் மீம்ஸ் பற்றியும், அவர்கள் தங்கள் கண்ணோட்டத்தை முன்வைக்கவுள்ளனர். இந்த இரண்டு மணிநேர சிறப்பு நிகழ்ச்சியானது காலை 10:30 மணிக்கு ஜீ தமிழில் உங்கள் இல்லங்களை வந்தடையும்.

  1.97 கோடி மக்கள்

  1.97 கோடி மக்கள்

  பண்டிகையின் மகிழ்ச்சியினை இடைவிடாமல் நேயர்களுக்கு அளிக்கும் விதமாக, ஜீ தமிழில் மதியம் 12:30 மணிக்கு தனுஷ், லால், லக்ஷ்மி பிரியா , சந்திரமௌலி, ரஜிஷா விஜயன் மற்றும் யோகி பாபுவின் நடிப்பில் உருவான - இந்த ஆண்டின் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படமான கர்ணன் ஒளிபரப்பாகும். ஜீ திரையில் முதல்முறையாகத் திரையிடப்பட்ட போது இந்த மெகாஹிட் திரைப்படத்தை வியக்கத்தக்க எண்ணிக்கையில் 1.97 கோடி* மக்கள் கண்டுகளித்தனர் (*ஆதாரம்- BARC Wk 33, தமிழகம்+ புதுவை). இராணுவத்தில் சேர ஆவலுடன் காத்திருக்கும் ஒரு கோபக்கார கிராமத்து இளைஞனின் கதையை இத்திரைப்படம் கூறுகிறது. ஒடுக்கப்பட்ட தன் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற அதிகாரிகளை எதிர்த்து பல்வேறு இன்னல்களை சந்திக்கிறான் கர்ணன். தங்களுக்கு எதிராக வேண்டுமென்றே குரூரமாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பை தளராமலும், தீர்மானமாகவும் தட்டிக்கேட்கும் கர்ணனின் போராட்டமே தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

  புதுமணத்தம்பதிகளின் தலைத் தீபாவளி

  புதுமணத்தம்பதிகளின் தலைத் தீபாவளி

  மாலை நேரத்தில் தேநீர் பருகியபடி கண்கவர் நிகழ்ச்சியினைக் காண விரும்புபவர்களுக்கு, ஜீ தமிழ் வழங்குகிறது, மெகா தலைத் தீபாவளி! இந்த சிறப்பு நிகழ்ச்சியானது மாலை 4 மணி முதல் ஒளிபரப்பாகும்.

  சமீபத்தில் நடந்த ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கோலாகலத் திருமணங்களைத் தொடர்ந்து, புதுமணத்தம்பதிகளின் தலைத் தீபாவளியைக் கொண்டாட தயாராகிவிட்டது ஜீ தமிழ். மணப்பெண்களின் குடும்பத்தினரும் தத்தம் புதிய மருமகன்களை வரவேற்கத் தயாராகி விட்டனர். ஆர்ஜே விஜய் மற்றும் ஆர்ஜே ஆனந்தி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், குடும்பங்கள் மற்றும் ஜோடிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், நடனப்போட்டிகளில் நட்சத்திரங்கள் தங்களது அற்புதமான திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். நினைத்தாலே இனிக்கும் தொடரின் பொம்மி மற்றும் சித்தார்த், கோகுலத்தில் சீதை தொடரின் அர்ஜுன் மற்றும் வாசு, புதுப்புது அர்த்தங்கள் தொடரின் லக்ஷ்மி மற்றும் ஹரி கிருஷ்ணன், மற்றும் நீதானே என் பொன் வசந்தம் தொடரின் அணு மற்றும் சூர்ய பிரகாஷ் ஆகியோர் இந்த மெகா தலைத் தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்கவுள்ளனர்.

  சந்தானம், யோகி பாபு , டிக்கிலோனா

  சந்தானம், யோகி பாபு , டிக்கிலோனா

  தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு முத்தாய்ப்பாக, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாகத் திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பாக, நேரடியாக உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டிக்கிலோனா திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. 2021-ஆம் ஆண்டின் நகைச்சுவை மிகுந்ததாக அறியப்படும் இத்திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். தனக்குப் பிடிக்காத கடந்த காலத்தை மாற்றுவதற்காக காலத்தில் பின்னோக்கி பயணிக்கும் ஒருவன் எதிர்கொள்ளும் விளைவுகளே இத்திரைப்படத்தின் சுவாரஸ்யமான கதையாகும். அவனால் கடந்த காலத்தை மாற்ற முடிந்ததா? என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. சந்தானம், அனகா, ஷிரின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் மாலை 6 மணிக்கு நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது. எனவே, இந்த தீபாவளிக்கு ஜீ தமிழுடன் இணைந்து பொழுதுபோக்கு நிறைந்த ஒரு நாளிற்குத் தயாராகுங்கள்! புதிய தகவல்களை உடனுக்குடன் பெற ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சமூக வலைத்தள பக்கங்களைப் பின் தொடரவும்.

  English summary
  Zee Tamil Deepavali Shows Full Schedule Details
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X