»   »  ஜீ தமிழ் டிவி தீபாவளி கொண்டாட்டம்: உத்தமவில்லன்... சேதுபதி, போடா போடி

ஜீ தமிழ் டிவி தீபாவளி கொண்டாட்டம்: உத்தமவில்லன்... சேதுபதி, போடா போடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, புத்தாடை, பலகாரம் கூடவே தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்றாகி விட்டது.

அக்டோபர் 29ம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மூன்று சிறப்பு திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளனர்.

யாக்கை குழுவினர் பேட்டி

யாக்கை குழுவினர் பேட்டி

காலை 9 மணிக்கு 'யாக்கை யுவனின் இசையில்' யாக்கை திரைப்படத்தின் இசை, யுவன் சங்கர் ராஜா பற்றி குழுவினர் சிறப்பு பேட்டி ஒளிபரப்பாக உள்ளது. யாக்கையில் யுவன் சங்கர் ராஜா இசை பற்றி விலாவாரியாக அலசுகின்றனர்.

உத்தம வில்லன்

உத்தம வில்லன்

காலை 10 மணிக்கு ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், பூஜா, ஆன்ட்ரியா, பாலச்சந்தர், கே. விஸ்வநாத் நடித்த உத்தமவில்லன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. பிற்பகல் 1 மணிக்கு போடா போடா சிம்பு, வரலட்சுமி நடித்த திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

விஜய் சேதுபதியின் சேதுபதி

விஜய் சேதுபதியின் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்த சேதுபதி புத்தம் புதிய திரைப்படம் தீபாவளி சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாகிறது. 3 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த கிரைம் திரில்லர் திரைப்படத்தை அருண் குமார் இயக்கியுள்ளார்.

அதிர்ஷ்ட லட்சுமி

அதிர்ஷ்ட லட்சுமி

அர்ச்சனா தொகுத்து வழங்கும் அதிர்ஷ்ட லட்சுமி சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். ஜூனியர் சூப்பர் ஸ்டார் குழந்தைகள் பங்கேற்கின்றனர். மாலை 5.30 மணிமுதல் 7 மணிவரை ஒளிபரப்பாகிறது.

ஜூனியர் சூப்பர் ஸ்டார்

ஜூனியர் சூப்பர் ஸ்டார்

தீபாவளி சிறப்பாக ஜூனியர் சூப்பர் ஸ்டார், டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அக்டோபர் 30ம் தேதியும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

ராஜா மந்திரி

ராஜா மந்திரி

அக்டோபர் 30ம் தேதி உஷா கிருஷ்ணா இயக்கத்தில் கலையரசன் நடித்த ராஜா மந்திரி திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தீபாவளியை ஜீ தமிழுடன் கொண்டாடுங்கள் என்று அழைக்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

English summary
Zee Tamil’s Diwali Special to Sparkle with the Brightest Entertainment on October 29th!.Zee Tamil celebrates this festival by lighting up TV screens with exciting special programs.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil